Donald B. Gibson என்ற ஆங்கில கவிதைகளின்
விமர்சகர் அவருடைய கறுப்பின கவிஞர்கள் (Modern Black Poets: A Collection
of Critical Essays (Prentice Hall, 1973) என்ற நூலில் லாங்ஸ்டோன் ஹுக்ஸ்
(Langston Hughes) பற்றிக் கூறும் போது ஹுக்ஸ் இன் கவிதைகள் மற்ற கறுப்பின
கவிஞர்களிடம் இருந்து வேறுபட்டது. இவரின் கவிதைகள் முழுவதும் மக்களின்,
குறிப்பாக கறுப்பின மக்களுக்கானது என்று கூறுகின்றார். ஆம் லாங்ஸ்டோன்
ஹுக்ஸ் அமெரிக்க கறுப்பின கவிஞர்களில் ஒரு விடிவெள்ளியாக மின்னியவர். 1902
ஆம் ஆண்டு பிப்ரவரி 1, ஜோப்லினில் பிறந்தவர். (Joplin, Missouri.) ஹுக்ஸ்
அவர்களின் இளமைக்காலம் அவரின் பெற்றோரின் மணவிலக்கினால் மிகுந்த
போராட்டங்களுக்கிடையே கழிந்தது. இருப்பினும் இந்த போராட்டமே அவரை ஒரு
தேர்ந்த கவிஞராவும் உருவாக்கியது எனின் மிகையல்ல.
ஒரு கவிஞராக தன்னை இவ்வுலகிற்கு
வெளிப்படுத்துவதற்கு முன்னர், ஒரு சலவைக்காரராக, சமையற்காரராக, பேருந்து
நடத்துனராக என பல வேலைகளை தன் வாழ்க்கை ஓட்டத்திற்காக செய்தவர் ஹுக்ஸ்.
இவரின் முதல் கவிதைத்தொகுப்பு The Weary Blues(1926)வெளிவந்தது. பின் 1930
இல் அவரின் முதல் நெடுங்கதை Without Laughter, (1930) வெளிவந்து
இலக்கியத்திற்கான ஹர்மோன் (Harmon) தங்கப் பதக்கத்தை பெற்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment