புற்றுநோய் செல்லின் டி.என்.ஏ.
தங்கத்துடன் பிணைகிறது. இப்பண்பினால் புற்றுநோயைக் கண்டறியும் புதிய
இரத்தப் பரிசோதனை ஒன்று உருவாக்கப்படமுடியும் என்று அறியப்பட்டுள்ளது. இந்த
வார “நேச்சர் கம்யூனிகேஷன்” (Nature Communications) இதழில் வெளியான
ஆய்வுக்கட்டுரை அறிமுகப்படுத்தும் இந்த புதிய சோதனை முறை, புற்றுநோய்
மருத்துவத்துறையில் நல்லதொரு மாற்றம் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.
இந்த மிக எளிய சோதனையைச் செய்ய ஆகும்
செலவும் குறைவு, முடிவுகளும் 90% வரை உறுதியான முறையில் அமையும். விரைவில்
பத்து நிமிடங்களுக்குள் சோதனையை செய்து முடித்துவிட முடியும். பயாப்சி
போன்று நோயாளியின் உடலை ஊடுருவும் முறையும் இதில் கிடையாது.
இரத்தப்பரிசோதனை (ஒரு சொட்டு அளவு இரத்தம்) மூலம் சிறிய அளவில் டி.என்.ஏ.
மட்டுமே தேவைப்படுகிறது என்பது இந்தச் சோதனை முறையின் சிறப்பு. இந்தச்
சோதனையால் புற்றுநோய் இருக்கிறது என்பதைக் கண்டறியமுடியும், ஆனால் எந்த
வகைப் புற்றுநோய் என்பதை அறியக் கூடிய திறன் இச்சோதனைக்கு இல்லை.
இச்சோதனை டி.என்.ஏ. மெத்திலேஷன்
(methylation) பண்பை அடிப்படையாகக் கொண்டது. டி.என்.ஏ மெத்திலேஷன் என்பது
மெத்தில் குரூப் (methyl group) ஒன்று சைட்டோசைன் நியூக்ளியோட்டைடு
(cytosine nucleotide) ஒன்றுடன் இணையும் மரபணு அளவில் நிகழும் ஒரு மாற்றம்
என்பது சுருக்கமான அறிவியல் விளக்கம். இந்த மரபணு மாற்றங்களே உயிர்கள்
எவ்வாறு இயங்கும், அந்த இயக்கத்தை மரபணுக்கள் எவ்வாறு கட்டுப்படுத்தும்
என்பதன் அடிப்படையும் ஆகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment