தற்சமயம் நடந்து முடிந்திருக்கும் 5 மாநில
தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லும் செய்தியென்னவென்றால், மோடி அலை என்ற
ஒரு மாயபிம்பத்தை தோற்றுவித்து, அதன் மூலம் மக்களை ஒரு மயக்கத்திலேயே
வைத்திருந்த பா.ச.க அரசை, ஒரு மதவாத அரசை, சனநாயகத்திற்கு கேடு விளைவிக்க
எத்தனிக்கும், ஒரு சர்வாதிகார அரசை, மக்கள் நலனில் சிறிதும் அக்கறைகொள்ளாத
ஒரு அரசை, கொதித்தெழுந்து மக்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய
காரணம், மதசார்பற்ற சமூகநீதிக்கு போராடும் சக்திகள் ஒன்றிணைந்து ஒரே
குரலாக, மதவாத பா.ச.க-வை எதிர்த்தது தான். மேலும், அனைத்து
எதிர்க்கட்சிகளும், சனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கில்
தான் ஒன்றிணைந்து போராடுகின்றன என்பதை மக்கள் உணர்ந்ததால் தான், பாசிச
பா.ச.க-விற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா,
சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள்
சமீபத்தில் வெளியாகின. தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகர
ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சி தான்
ஆண்டுகொண்டிருந்தது. ஆனால், அங்கு சாதி அடிப்படையிலான ரெட்டிகளுக்கும்,
கம்மாக்களுக்கும் இடையே அதிகாரப்போட்டி வந்ததின் விளைவு, அரசின் மீது
அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்தது. அதனை, மிகவும் துணிச்சலாக அணுகுகினார்
சந்திரசேகர ராவ். ஆட்சியை களைத்துவிட்டு தேர்தலுக்கு ஆயுத்தமானார்.
மீண்டும் தன்னுடைய ஆட்சியை மூன்றில் இரண்டு பங்கு வெற்றிபெற்று தக்க
வைத்துக் கொண்டிருக்கிறார். மிசோராமில், காங்கிரசு தன்னுடைய நீண்டகால
ஆட்சியை இழந்திருக்கிறது. அம்மாநில கட்சியான தேசிய முன்னணி அரிதி
பெரும்பான்மை பெற்று, தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. 5
தேர்தல்களில், இரண்டு மாநிலக் கட்சிகள் வென்றிருக்கின்றன என்பதில்
மகிழ்ச்சி.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment