Thursday 28 February 2019

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை


siragu vanaviyal1
மாந்த இனத்தின் வாழ்வியல் கூறுகளில் வனவியல் எவ்வாறு ஒன்றியும் இணைந்தும் ஊடுருவியும் உள்ளது என்பதை சங்கத் தமிழ் இலக்கியம் எவ்வகையில் எடுத்துரைக்கின்றது என்பதை பேராழியின் துளி நீரரை சுவைத்துப் பார்க்கும் நோக்கில் நவில்வதே இக்கட்டுரை.
மனித இனம் முதலில் தோன்றிய பகுதி கடல்கொண்ட தமிழகத்தின் தென்பகுதி என்றும் அதன் பெயர் “லெமூரியா” என்றும் அதன் வரலாற்றை நுணுகி ஆராய்ந்து வரையறுத்த வரலாற்று ஆய்வறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் லெமூரியா என்பது “லெமூர்” என்ற குரங்கின் பெயர்தான் என்பதை நோக்கும் போது பிற்காலத்தில் மனித இனத்தின் மூதாதையர் குரங்குதான் என்று டார்வின் என்ற மேனாட்டு மாந்தவியல் அறிஞனின் கூற்று ஒத்துப் போவதை உணரலாம்.

இங்கு தொடங்கும் வனவியல் என்பது தாவரவியல், விலங்கியல், பறவையியல், பூச்சியியல், நுண்ணுயிரியல். இயற்கையின் சூழலியல் சுற்றுப்புறவியல் என பல்கிபெருகிய அனைத்தையும் உள்ளடக்கிய “பேரியல்” என்பதே வனவியல் என்பதை மனிதில் நிறுத்தினால் அதில் உள்ளடங்கிய தாவரவியலையும் விலங்கியலையும் பறவையியலையும் சேர்ந்த ஒரு சில செய்திகளை கீழ்கண்டவாறு நுகரலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 27 February 2019

தக்கார் அரசியல், தகவிலர் அரசியல்


siragu thakkaar arasiyal1
ஆரோக்கியமான அரசியல்பால் அக்கறையுடன், நடப்பு அரசியலைக் கவனித்து வருபவர்களையும் தலையைப் பிய்த்துக்கொண்டு ஓட வைத்து விடுவார்கள் போலிருக்கிறது, இப்போது அரசியலில் இருக்கும் அரசியல்வாதிகள்..
அரசியல் மாற்றத்துக்கு பற்பல தளங்கள் உண்டு. கட்சி அரசியல், இயக்க அரசியல், ஊடக அரசியல், சாதீய/மத ஒடுக்குமுறை மீறும் அரசியல், அரசு இயந்திரப் பணியாளர்கள் அரசியல், தனியார்துறை மற்றும் பொருளாதார அரசியல், சமூக மாற்ற அரசியல், பண்பாட்டு மீட்சி அரசியல், மொழிசார்ந்த அரசியல், விவசாயம் சார்ந்த ஏற்றங்கள் நோக்கிய அரசியல், பெண்கள் மீதான அடக்குமுறை மீட்சி அரசியல், கல்வி மாற்றங்களுக்கான அரசியல், சமூக வளைதளங்களில், பொதுவெளிகளில் பொதுமக்கள் கூடி விவாதிக்கும் விமர்சக அரசியல் என்று அனைத்துத் தரப்பிலும் இருக்கும் அனைவரும் சேர்ந்து இழுக்கவேண்டிய தேர்தான் இது.

இந்த ஒருங்கிணைந்த முன்னகர்வுகளால்தான் நம்மால், அரசியல் மாற்றத்தை நோக்கி மக்களுக்கான சட்டங்களை நாம் சட்டமன்றத்தின் மூலமும், நாடாளுமன்றத்தின் மூலமும் நம்மால் வென்றெடுக்க முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 26 February 2019

5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது எக்காலத்திற்கும் ஏற்கக்கூடியதல்ல!


siragu 5 and 8 class1
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திடீரென்று தமிழக பள்ளிக் கல்வித்துறையிடமிருந்து சுற்றறிக்கை ஒன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது. அதிலுள்ள அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், 5 மற்றும் 8 ஆகிய இரு வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்தொகை கட்ட தேவையில்லை என்றும், அது மட்டுமல்லாமல் வரும் இந்த 2018-2019 ஆம் ஆண்டே செயல்படுத்தப்படுமென்றும் கூறப்பட்டிருந்தது.
இதனை கேள்விப்பட்ட ஆசிரியர்களும், பெற்றோர்களும், பொது மக்களும் மிகவும் வியப்புற்று பதட்டத்தில் இருந்தனர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களே இதை ஏற்கவில்லை. பெற்றோர்கள் கலக்கத்தில் இருந்தனர். பொதுமக்களும் சமூகஊடகங்களில் தங்கள் எதிர்கருத்துகளை பரவலாக பதிவு செய்து வந்தனர். அதன்பிறகு, நேற்று மாலை, தமிழக அரசின் கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள், இந்த கல்வி ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்காது என்று தற்காலிமாக சொல்லியிருக்கிறார்.

இரண்டாவதாக இந்தத் தேர்வு நடக்கும் என்ற அறிவிப்பு கூட, சட்டப்பேரவையிலோ, அமைச்சரோ அறிவிக்காமல், எதிர்கட்சிகளை ஆலோசிக்காமல், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சார்பில் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் எப்படி ஒரு அரசாங்கத்தால் அலட்சியப்படுத்தப்படுகிறது? மக்களுக்கு, இந்த அரசின் மீது அய்யம் ஏற்படாதா? இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான அறிவிப்பை, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கவனத்திற்கு வராமல் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதுவும், அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது என்றால், இந்த அரசின் பொறுப்பற்றத் தன்மையைத்தான் இந்த செயல் நிரூபிக்கிறது!.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 21 February 2019

பெரியாரின் இந்தி எதிர்ப்பு போரும், அவர் மீது பதியப்பட்ட வழக்கும் !!


Siragu periyar2
1937 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ராஜகோபாலச்சாரியார் இந்தியை கட்டாயமாக நுழைத்தபோது, தந்தை பெரியார் இதனை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். தமிழறிஞர்களையும் சுயமரியதை இயக்க தொண்டர்களையும் இணைத்து இந்தி எதிர்ப்பு மாநாடுகளை நடத்தினார்.

இந்தி எதிர்ப்பு படை தமிழ்நாடு முழுக்க பயணித்து இந்தி திணிப்பை எதிர்த்தது. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு சென்னை ஒற்றைவாடைத் திரையரங்கில் 13.11.1938 அன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் தந்தை பெரியாருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இம்மாநாட்டில் தந்தை பெரியார் இந்தி திணிப்பை எதிர்த்து உரையாற்றினார். இந்த உரைக்காக தந்தை பெரியார் மீது சென்னை அரசாங்கத்தாரால் 117-ஆவது 7(1) செக்ஷன் கீழ் கொண்டுவரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு 5.02.1938 காலை 11:25 மணிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட்டு 4 வது நீதிபதி மாதவராவ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 19 February 2019

தமிழ் வளர்ச்சியில் ஐரோப்பியரால் விளைந்த திருப்புமுனை


Siragu German Thamizhiyal - Subashini
நூலும் நூலாசிரியரும்:
சமயம் பரப்பும் நோக்கில் அமைந்திருந்த ஐரோப்பியரின் தமிழக வருகை, தொன்று தொட்டு காலந்தோறும் தமிழகத்தில் இருந்துவந்த தமிழின் நிலைக்கும், தமிழ்க்கல்வியின் நிலைக்கும் ஒரு திருப்புமுனையாக இருந்தது. ஐரோப்பியர் தங்களது சமயப்பணி வளர்ச்சிக்காக தமிழறிய எடுத்துக் கொண்ட அணுகுமுறையும், தொழிற்புரட்சியின் காரணமாக உருவாகிய அச்சுநூல் பதிப்பிக்கும் முறையும் ஒருங்கிணைந்ததில் தமிழின் வளர்ச்சியும் தமிழ்க்கற்பித்தலின் வளர்ச்சியும் ஐரோப்பியர் வருகையால் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியது. தமிழின் வரலாற்றில் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதுவே முனைவர் க. சுபாஷிணியின் ஆய்வின் முடிவு.

ஜெர்மனியில் வாழும் நூலாசிரியர் தனது தமிழறிவையும், தமிழாய்வு ஆர்வத்தையும், ஜெர்மானிய மொழியறிவையும், ஜெர்மனி மற்றும் மற்றபிற ஐரோப்பிய நாடுகளின் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், அரசின் ஆவணச் சேமிப்புக் கருவூலங்கள் ஆகியனவற்றைத் தக்கபடி பயன்படுத்திக் கொள்ள அவருக்குக் கிடைத்த வாய்ப்பையும் நழுவவிடாததால், தமிழ் குறித்த இந்த ஆய்வுநூல் கூறும் கருத்துக்களை உலகம் அறிவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.அயல்நாடுகளில் வாழும் தமிழர் எவ்வாறு தங்கள் சூழ்நிலையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் குறித்த புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தலாம் என்பதைச் செயலில் காட்டும் வழிகாட்டியாக இருப்பதற்கு க. சுபாஷிணியைப் பாராட்டலாம். நூலுக்கு இத்துறையின் ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் முன்னுரை அளித்திருக்கின்றார். இந்த நூலால் நாம் அறியும் செய்திகள் என்ன?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 17 February 2019

இந்த ஐந்தாண்டுகளில் பா.ச.க அரசின் செயல்பாடுகள் தோல்வியை தழுவியிருக்கிறதா?

Siragu mega team1
கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் மோடியின் தலைமையிலான பா.ச.க அரசு, தோல்வியை கண்டிருக்கிறதா, வெற்றி பெற்றிருக்கிறதா என்ற கேள்வி எழுமானால், நிச்சயம் தோல்வியைத்தான் தழுவியிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏனென்றால், இவர்களின் செயல் திட்டங்கள் அனைத்தும் தோல்வியைத்தான் கண்டிருக்கின்றன. அது சமூக ரீதியான வகையிலும் சரி, பொருளாதார ரீதியான வகையிலும் சரி,  கல்வி ரீதியிலான வகையிலும் சரி, நிர்வாக ரீதியிலான வகையிலும் சரி, அனைத்திலுமே மக்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.!
2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் வாக்குறுதிகள் என்று சொன்னவைகளில்எதுவுமே, இந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை!

100 நாட்களில் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் மீட்கப்படும் என்று சொல்லப்பட்டது. மீட்கப்பட்ட அந்த  பணம் நாட்டின் ஒவ்வொருவரின் பெயரிலும் 15 லட்சம் வங்கியில் போடப்படும் என்றும் கூறப்பட்டது. அது மீட்கப்படவில்லை, மக்களின் பெயரில் போடப்படவும் இல்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அடுத்து பார்த்தோமானால், அமெரிக்க டாலரை 30 ரூபாய்க்கு கொண்டுவந்து, இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்துவோம் என்றும் சொன்னார்கள். ஆனால், அது ரூ. 70 யை தாண்டிவிட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாயில் கிடைக்கும் என்று சொன்ன பா.ச.க, ஆட்சிக்கு வந்ததும், 80 ரூபாய் வரை கொண்டு சென்றுவிட்டது.  எரிவாயு உருளையின் விலை, 350 ரூபாயாக இருந்தது. அது தற்போது பா.ச.க-வின் ஆட்சியில், ரூ.900 வரை சென்றுவிட்டது. மக்களின் அனைத்து வாழ்வாதார தேவைகளான, உணவுப்பொருட்கள், மருந்து விலை, பேருந்து கட்டணங்கள், கல்வி கட்டணங்கள் என அனைத்தையுமே உயர்த்திவிட்டு, மக்கள் வாழவே முடியாதபடிக்கு வழியை குறுக்கிவிட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 14 February 2019

தொகுப்பு கவிதை (சாட்சியங்கள், அம்மானை வழக்கு)

சாட்சியங்கள்

-இல.பிரகாசம்
Siragu pirappokkum1
துவைக்கத் தொடங்கியவுடன்
அழுக்குகள் மிஷினைக் கவ்விக் கொண்டன
துணியின் அழுக்குகள் பலவிதமானவை
அவை நீண்டநாள் பாவு நூலுடனும்
வெளிறிப் போன உடலுடனும் பந்தம் கொண்டிருந்தன.
இன்று அதற்கு கொடுக்கப்பட்ட அழுக்கு
புதுவிதமாக இருந்திருக்கும்.

அந்தத் துணியிலிருந்த ரத்தக் கறைகள்
நாற்றம் வீசத் தொடங்கிற்று..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 13 February 2019

திருக்குறளில் நுண்பொருள் அறிவியல்


siragu-tirukkural-1
“நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணற்கால்
கண்ணல்லது இல்லைபிற”
இது குறிப்பறிதல் அதிகாரத்தில் அமைச்சர் அறிவுறுத்தும் நுட்பமான செய்திகளை மன்னன் அறிய கண்ணைத்தான் பயன்படுத்துகின்றான் என்பதை மேலெழுந்தவாரியாகப் பொருள் கூறுவர் பெருமக்கள்.
ஆயினும் திருக்குறட்பாக்கள் வெளிப்படையாக தலைப்புக்காக தரும் பொருளை விட நுட்பமான செய்திகளைத் தேடுபவர்களுக்கு நுண்பொருள்களை உருக்கி வைத்திருப்பதற்காகவே வள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார் என்பதை வெளிக்கொணுற்வதே இக்கட்டுரையின் நோக்கம், இக்குறட்பாவில் கூட என்னைப்போன்ற அறிவியற் காதலர்க்கு, கண்ணைக்கடந்து ஒரு உலகம் உள்ளது. அதன் மூலம் உயிர் அற்ற பொருள்களில் குறிப்புக்களைக் கண்டு உணர, நுண்ணோக்கிகள் தேவை. அவற்றை வடிவமை என்று சொல்லியிருப்பதாகவே தோன்றுகின்றது.
காதலர்க்கு, காதலி அல்லது காதலன் செயல்கள் பல்வேறு பொருட்களை உணர்த்துவது போல, அவர்அவர்கள் கண்களுக்கு மட்டும் விளங்கக்கூடிய நுண்பொருள்கள் நிறைந்தது திருக்குறள். மேலும் தேடுவோம்.
மூலக்கூறுகளின் அறிவு:-
வஞ்சமனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
இலம் என்று அசையி இருப்பாரைக் காணின்
நிலம் என்னும் நல்பான் நகும்.

நிலம் நகும், பூதங்கள் ஐந்தும் நகும் என்று வள்ளுவர் உயிர்ப்பொருளுக்கான பண்பினை, சடப்பொருள்களுக்கு இருப்பதாக ‘நகும்” எனும் சொல்லால் குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 12 February 2019

பிறவிப் பெருங்கடல்


siragu piravikkadal2

இந்து மதச் சாத்திரங்கள் மக்களை வருண/சாதி ரீதியாகப் பிரித்து வைத்து உள்ளன என்பதும், அந்த வருண/சாதி ஏற்றத்தாழ்வுகள் பிறவி அடிப்படையிலேயே விதிக்கப்பட்டு உள்ளன என்பதும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மைகள். ஆனால் பார்ப்பனர்கள் “இல்லையே! வருண/சாதிப் பிரிவுகள் பிறவி அடிப்படையில் இல்லையே! அவை குணத்தின் செய்கையின் அடிப்படையில் தானே நிர்ணயிக்கப்பட்டு உள்ளன?” என்று கொஞ்சமும் கூசாமல் வாதம் செய்கின்றனர்.
“குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செய்கை யற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தேன் என்றுணர்”

என்ற பகவத்கீதையின் 4வது அத்தியாயத்தின் 13வது செய்யுளை மேற்கோள் காட்டி உரக்கக் கூவுகின்றனர். பார்ப்பனர்களின் இந்த இரைச்சலுக்கு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் பலர் மயங்கி / குழம்பி விடுகின்றனர். இந்த மயக்கம் குழப்பம் இருக்கும் நிலையிலயே “வருணம்/சாதி பிறவி அடிப்படையில் இல்லாமல் குணத்தின், செய்கையின் அடிப்படையில் இருக்கும்போது இடஒதுக்கீடு சாதி அடிப்படையில் இருப்பது தவறு” என்ற நச்சுக்கருத்தை/நச்சுச்சிந்தனையை மக்கள் மனதில் விதைக்க முற்படுகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 7 February 2019

நீதி


Religious Leader Mahatma Gandhi 1869 - 1948
இந்திய மண்ணின் விடுதலைக்காக ஆயிரம் ஆயிரம் தியாக வீரர்கள் தம் உயிர், பொருள், ஆவி அனைத்தையும் இழந்துள்ளனர். தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தது அல்ல இந்திய சுதந்திரம். செந்நீர் ஊற்றி கண்ணீரால் காத்துப் பெற்றது சுதந்திரம். இந்திய சுதந்திரத்திற்காக எத்தனை எத்தனை பேர் இன்னுயிர் இழந்தனர். சிறைபட்டனர். எண்ணிக்கை எண்ணி முடியாது. வரலாறு சொல்லி முடியாது.
அண்ணல் காந்தியடிகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நீதி மன்றத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அக்காலத்தில் ஆண்ட ஆங்கில அரசிற்கு எதிராக, பத்திரிக்கைகளில் காந்தியடிகள் எழுதி மக்கள் அமைதியைக் குலைக்கிறார் என்பது அரசு தரப்புக் குற்றச்சாட்டு. இதனைக் காந்தி எதிர்கொள்கிறார்.

வழக்கறிஞராக, பாரிஸ்டராக தென்ஆப்பிரிக்காவில் கடமையாற்றிய அண்ணல் காந்தியடிகள் அக்காலத்திலேயே சமதானத்தின் மீது ஆர்வம் கொண்டு செயல்பட்டார். இரு செல்வர்களுக்கு இடையே நடைபெற்ற தென்னாப்பிரிக்க வழக்கில் இவர் ஆஜர் ஆகி அவ்வழக்கினை அமைதியான முறையில் இருவரும் ஒத்துக்கொள்ளும் நிலையில் நீதிமன்றத்தினை விடத்து அமைதித் தீர்வினைக் கண்டவர் அவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 5 February 2019

‘தி காந்தி மர்டர்’


Siragu-gandhi_murder3
இது காந்தியின் நினைவு நாளன்று இந்து மகா சபையின் தலைவர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் காவிகளின் கூட்டமொன்று காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்துக் கொண்டாடியது குறித்து மிகைப்படுத்தி எழுதப்பட்ட தலைப்பு அல்ல (பாப்ரி மஸ்ஜித் இடிபட்ட நாளை வெற்றிநாளாகக் கொண்டாடிவரும் கூட்டத்திடம் வேறென்ன நாம் எதிர்பார்க்க முடியும்?). இது காந்தியின் 71 ஆவது நினைவுநாளையொட்டி, அந்நாளில் இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் திரையிடப்பட்ட ‘தி காந்தி மர்டர்’ (The Gandhi Murder) என்ற திரைப்பட விமர்சனம்.

இந்தப்படம் துவக்கத்தில் இருந்து இந்தியாவில் எதிர்ப்பை எதிர்கொண்டே வந்திருக்கிறது. படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதால் துபாயில் கொஞ்சமும், பெரும்பாலான பகுதியை இலங்கையிலும் படம் பிடித்துள்ளார்கள். பின்னர் திரைப்படத் தணிக்கை குழு ஒரு 13 மாதங்களுக்கு இழுத்தடித்துள்ளது. படம் வெளியிடப் போவதையொட்டி தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்குக் கொலைமிரட்டல் அனுப்பத் துவங்கியதில் தயாரிப்பாளர் இருமுறை வீடுமாற்ற வேண்டியது நிகழ்ந்திருக்கிறது. தொடர்ந்து தடைகளையே எதிர்கொண்ட திரைப்படக் குழுவினர் இந்தியாவில் திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்ற முடிவெடுத்ததில் காந்தியின் இந்தியாவில், காந்தியின் நினைவு நாளன்று, காந்தியின் படம் வெளியாகவில்லை. வாழ்க ஊடகச் சுதந்திரம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 4 February 2019

சமூக நீதி – கடந்து வந்த பாதை


siragu social justice1
சமூகநீதி என்பது 2000 ஆண்டுகளாக சமூகத்தில் நசுக்கப்பட்டவர்களுக்காக கல்வி நீரோடை பெறச் செய்யும் ஒரு உரிமை பெறும் ஏற்பாடு. அது சலுகை அல்ல உரிமை என்ற புரிதல் இந்த தலைமுறையினருக்கு இல்லை என்பதே வேதனை. நாம் கடந்து வந்த பாதை கற்களாலும், முட்களாலும் நிறைந்திருந்தன. அதனை செப்பனிட்டு இன்றைய நம் சமூகத்தை ஓரளவிற்கு கல்வியில் நிறைவடையச் செய்த பெருமை நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்க தலைவர்களுக்கு உண்டு. நாம் கடந்து வந்த வரலாற்றை சற்றே நினைவுபடுத்திக்கொள்ள இக்கட்டுரை.
1915 ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தில் (அன்று தமிழ்நாடு இல்லை, ஒன்றிணைந்த மெட்ராஸ் மாகாணம்) பார்ப்பனர் ஆதிக்கம் இருந்த நிலையை பார்க்கலாம்.

கல்வி இலாகாவில் மொத்தம் இருந்த உத்தியோகங்கள் 518. இதில் பார்ப்பனர்கள் 399 பேர். கிறித்துவரும், ஆங்கிலோ இந்தியரும் 73 பேர், முகமதியர்கள் 28 பேர், பார்ப்பனரல்லாத இந்துக்கள் 18 பேர் – ஆதி திராவிடர் உட்பட.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.