கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திடீரென்று தமிழக பள்ளிக்
கல்வித்துறையிடமிருந்து சுற்றறிக்கை ஒன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது. அதிலுள்ள அதிர்ச்சியான செய்தி
என்னவென்றால், 5 மற்றும் 8 ஆகிய இரு வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு
நடத்தப்படும் என்றும், அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்தொகை கட்ட தேவையில்லை
என்றும், அது மட்டுமல்லாமல் வரும் இந்த 2018-2019 ஆம் ஆண்டே
செயல்படுத்தப்படுமென்றும் கூறப்பட்டிருந்தது.
இதனை கேள்விப்பட்ட ஆசிரியர்களும்,
பெற்றோர்களும், பொது மக்களும் மிகவும் வியப்புற்று பதட்டத்தில் இருந்தனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களே இதை ஏற்கவில்லை.
பெற்றோர்கள் கலக்கத்தில் இருந்தனர். பொதுமக்களும் சமூகஊடகங்களில் தங்கள்
எதிர்கருத்துகளை பரவலாக பதிவு செய்து வந்தனர். அதன்பிறகு, நேற்று மாலை,
தமிழக அரசின் கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள், இந்த கல்வி
ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்காது என்று
தற்காலிமாக சொல்லியிருக்கிறார்.
இரண்டாவதாக இந்தத் தேர்வு நடக்கும் என்ற
அறிவிப்பு கூட, சட்டப்பேரவையிலோ, அமைச்சரோ அறிவிக்காமல், எதிர்கட்சிகளை
ஆலோசிக்காமல், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சார்பில் அனுப்பப்பட்டதாக
சொல்லப்படுகிறது. இதெல்லாம் எப்படி ஒரு அரசாங்கத்தால்
அலட்சியப்படுத்தப்படுகிறது? மக்களுக்கு, இந்த அரசின் மீது அய்யம் ஏற்படாதா?
இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான அறிவிப்பை, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்
கவனத்திற்கு வராமல் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதுவும், அனைத்து மாவட்ட
முதன்மை அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது என்றால், இந்த அரசின்
பொறுப்பற்றத் தன்மையைத்தான் இந்த செயல் நிரூபிக்கிறது!.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment