கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் மோடியின்
தலைமையிலான பா.ச.க அரசு, தோல்வியை கண்டிருக்கிறதா, வெற்றி பெற்றிருக்கிறதா
என்ற கேள்வி எழுமானால், நிச்சயம் தோல்வியைத்தான் தழுவியிருக்கிறது
என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏனென்றால், இவர்களின் செயல் திட்டங்கள்
அனைத்தும் தோல்வியைத்தான் கண்டிருக்கின்றன. அது சமூக ரீதியான வகையிலும்
சரி, பொருளாதார ரீதியான வகையிலும் சரி, கல்வி ரீதியிலான வகையிலும் சரி,
நிர்வாக ரீதியிலான வகையிலும் சரி, அனைத்திலுமே மக்கள் மிகவும் பாதிப்பிற்கு
உள்ளாகி இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.!
2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் வாக்குறுதிகள் என்று சொன்னவைகளில்எதுவுமே, இந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை!
100 நாட்களில் சுவிஸ் வங்கியில் உள்ள
கறுப்புப்பணம் மீட்கப்படும் என்று சொல்லப்பட்டது. மீட்கப்பட்ட அந்த பணம்
நாட்டின் ஒவ்வொருவரின் பெயரிலும் 15 லட்சம் வங்கியில் போடப்படும் என்றும்
கூறப்பட்டது. அது மீட்கப்படவில்லை, மக்களின் பெயரில் போடப்படவும்
இல்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அடுத்து
பார்த்தோமானால், அமெரிக்க டாலரை 30 ரூபாய்க்கு கொண்டுவந்து, இந்திய ரூபாய்
மதிப்பை உயர்த்துவோம் என்றும் சொன்னார்கள். ஆனால், அது ரூ. 70 யை
தாண்டிவிட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாயில் கிடைக்கும் என்று
சொன்ன பா.ச.க, ஆட்சிக்கு வந்ததும், 80 ரூபாய் வரை கொண்டு சென்றுவிட்டது.
எரிவாயு உருளையின் விலை, 350 ரூபாயாக இருந்தது. அது தற்போது பா.ச.க-வின்
ஆட்சியில், ரூ.900 வரை சென்றுவிட்டது. மக்களின் அனைத்து வாழ்வாதார
தேவைகளான, உணவுப்பொருட்கள், மருந்து விலை, பேருந்து கட்டணங்கள், கல்வி
கட்டணங்கள் என அனைத்தையுமே உயர்த்திவிட்டு, மக்கள் வாழவே
முடியாதபடிக்கு வழியை குறுக்கிவிட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment