ஆரோக்கியமான அரசியல்பால் அக்கறையுடன்,
நடப்பு அரசியலைக் கவனித்து வருபவர்களையும் தலையைப் பிய்த்துக்கொண்டு ஓட
வைத்து விடுவார்கள் போலிருக்கிறது, இப்போது அரசியலில் இருக்கும்
அரசியல்வாதிகள்..
அரசியல் மாற்றத்துக்கு பற்பல தளங்கள்
உண்டு. கட்சி அரசியல், இயக்க அரசியல், ஊடக அரசியல், சாதீய/மத ஒடுக்குமுறை
மீறும் அரசியல், அரசு இயந்திரப் பணியாளர்கள் அரசியல், தனியார்துறை மற்றும்
பொருளாதார அரசியல், சமூக மாற்ற அரசியல், பண்பாட்டு மீட்சி அரசியல்,
மொழிசார்ந்த அரசியல், விவசாயம் சார்ந்த ஏற்றங்கள் நோக்கிய அரசியல், பெண்கள்
மீதான அடக்குமுறை மீட்சி அரசியல், கல்வி மாற்றங்களுக்கான அரசியல், சமூக
வளைதளங்களில், பொதுவெளிகளில் பொதுமக்கள் கூடி விவாதிக்கும் விமர்சக அரசியல்
என்று அனைத்துத் தரப்பிலும் இருக்கும் அனைவரும் சேர்ந்து இழுக்கவேண்டிய
தேர்தான் இது.
இந்த ஒருங்கிணைந்த முன்னகர்வுகளால்தான்
நம்மால், அரசியல் மாற்றத்தை நோக்கி மக்களுக்கான சட்டங்களை நாம்
சட்டமன்றத்தின் மூலமும், நாடாளுமன்றத்தின் மூலமும் நம்மால் வென்றெடுக்க
முடியும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment