இந்திய மண்ணின் விடுதலைக்காக ஆயிரம்
ஆயிரம் தியாக வீரர்கள் தம் உயிர், பொருள், ஆவி அனைத்தையும் இழந்துள்ளனர்.
தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தது அல்ல இந்திய சுதந்திரம். செந்நீர் ஊற்றி
கண்ணீரால் காத்துப் பெற்றது சுதந்திரம். இந்திய சுதந்திரத்திற்காக எத்தனை
எத்தனை பேர் இன்னுயிர் இழந்தனர். சிறைபட்டனர். எண்ணிக்கை எண்ணி முடியாது.
வரலாறு சொல்லி முடியாது.
அண்ணல் காந்தியடிகள் சிறையில்
அடைக்கப்பட்டார். அவரை நீதி மன்றத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
அக்காலத்தில் ஆண்ட ஆங்கில அரசிற்கு எதிராக, பத்திரிக்கைகளில் காந்தியடிகள்
எழுதி மக்கள் அமைதியைக் குலைக்கிறார் என்பது அரசு தரப்புக் குற்றச்சாட்டு.
இதனைக் காந்தி எதிர்கொள்கிறார்.
வழக்கறிஞராக, பாரிஸ்டராக
தென்ஆப்பிரிக்காவில் கடமையாற்றிய அண்ணல் காந்தியடிகள் அக்காலத்திலேயே
சமதானத்தின் மீது ஆர்வம் கொண்டு செயல்பட்டார். இரு செல்வர்களுக்கு இடையே
நடைபெற்ற தென்னாப்பிரிக்க வழக்கில் இவர் ஆஜர் ஆகி அவ்வழக்கினை அமைதியான
முறையில் இருவரும் ஒத்துக்கொள்ளும் நிலையில் நீதிமன்றத்தினை விடத்து
அமைதித் தீர்வினைக் கண்டவர் அவர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment