1937 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாட்டின்
முதல் அமைச்சர் ராஜகோபாலச்சாரியார் இந்தியை கட்டாயமாக நுழைத்தபோது, தந்தை
பெரியார் இதனை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். தமிழறிஞர்களையும்
சுயமரியதை இயக்க தொண்டர்களையும் இணைத்து இந்தி எதிர்ப்பு மாநாடுகளை
நடத்தினார்.
இந்தி எதிர்ப்பு படை தமிழ்நாடு முழுக்க
பயணித்து இந்தி திணிப்பை எதிர்த்தது. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டு
பெண்கள் மாநாடு சென்னை ஒற்றைவாடைத் திரையரங்கில் 13.11.1938 அன்று
நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் தந்தை பெரியாருக்கு பெரியார் என்ற பட்டம்
வழங்கப்பட்டது. இம்மாநாட்டில் தந்தை பெரியார் இந்தி திணிப்பை எதிர்த்து
உரையாற்றினார். இந்த உரைக்காக தந்தை பெரியார் மீது சென்னை அரசாங்கத்தாரால்
117-ஆவது 7(1) செக்ஷன் கீழ் கொண்டுவரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது. அந்த
வழக்கு 5.02.1938 காலை 11:25 மணிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட்டு 4
வது நீதிபதி மாதவராவ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment