“நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணற்கால்
கண்ணல்லது இல்லைபிற”
கண்ணல்லது இல்லைபிற”
இது குறிப்பறிதல் அதிகாரத்தில் அமைச்சர்
அறிவுறுத்தும் நுட்பமான செய்திகளை மன்னன் அறிய கண்ணைத்தான்
பயன்படுத்துகின்றான் என்பதை மேலெழுந்தவாரியாகப் பொருள் கூறுவர் பெருமக்கள்.
ஆயினும் திருக்குறட்பாக்கள் வெளிப்படையாக
தலைப்புக்காக தரும் பொருளை விட நுட்பமான செய்திகளைத் தேடுபவர்களுக்கு
நுண்பொருள்களை உருக்கி வைத்திருப்பதற்காகவே வள்ளுவர் திருக்குறளை
இயற்றியுள்ளார் என்பதை வெளிக்கொணுற்வதே இக்கட்டுரையின் நோக்கம்,
இக்குறட்பாவில் கூட என்னைப்போன்ற அறிவியற் காதலர்க்கு, கண்ணைக்கடந்து ஒரு
உலகம் உள்ளது. அதன் மூலம் உயிர் அற்ற பொருள்களில் குறிப்புக்களைக் கண்டு
உணர, நுண்ணோக்கிகள் தேவை. அவற்றை வடிவமை என்று சொல்லியிருப்பதாகவே
தோன்றுகின்றது.
காதலர்க்கு, காதலி அல்லது காதலன் செயல்கள்
பல்வேறு பொருட்களை உணர்த்துவது போல, அவர்அவர்கள் கண்களுக்கு மட்டும்
விளங்கக்கூடிய நுண்பொருள்கள் நிறைந்தது திருக்குறள். மேலும் தேடுவோம்.
மூலக்கூறுகளின் அறிவு:-
வஞ்சமனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
இலம் என்று அசையி இருப்பாரைக் காணின்
நிலம் என்னும் நல்பான் நகும்.
ஐந்தும் அகத்தே நகும்
இலம் என்று அசையி இருப்பாரைக் காணின்
நிலம் என்னும் நல்பான் நகும்.
நிலம் நகும், பூதங்கள் ஐந்தும் நகும்
என்று வள்ளுவர் உயிர்ப்பொருளுக்கான பண்பினை, சடப்பொருள்களுக்கு இருப்பதாக
‘நகும்” எனும் சொல்லால் குறிப்பிடுகின்றார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment