நூலும் நூலாசிரியரும்:
சமயம் பரப்பும் நோக்கில் அமைந்திருந்த
ஐரோப்பியரின் தமிழக வருகை, தொன்று தொட்டு காலந்தோறும் தமிழகத்தில்
இருந்துவந்த தமிழின் நிலைக்கும், தமிழ்க்கல்வியின் நிலைக்கும் ஒரு
திருப்புமுனையாக இருந்தது. ஐரோப்பியர் தங்களது சமயப்பணி வளர்ச்சிக்காக
தமிழறிய எடுத்துக் கொண்ட அணுகுமுறையும், தொழிற்புரட்சியின் காரணமாக
உருவாகிய அச்சுநூல் பதிப்பிக்கும் முறையும் ஒருங்கிணைந்ததில் தமிழின்
வளர்ச்சியும் தமிழ்க்கற்பித்தலின் வளர்ச்சியும் ஐரோப்பியர் வருகையால் ஒரு
புதிய பரிணாமத்தை எட்டியது. தமிழின் வரலாற்றில் அது ஒரு திருப்புமுனையாக
அமைந்தது என்பதுவே முனைவர் க. சுபாஷிணியின் ஆய்வின் முடிவு.
ஜெர்மனியில் வாழும் நூலாசிரியர் தனது
தமிழறிவையும், தமிழாய்வு ஆர்வத்தையும், ஜெர்மானிய மொழியறிவையும், ஜெர்மனி
மற்றும் மற்றபிற ஐரோப்பிய நாடுகளின் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், அரசின்
ஆவணச் சேமிப்புக் கருவூலங்கள் ஆகியனவற்றைத் தக்கபடி பயன்படுத்திக் கொள்ள
அவருக்குக் கிடைத்த வாய்ப்பையும் நழுவவிடாததால், தமிழ் குறித்த இந்த
ஆய்வுநூல் கூறும் கருத்துக்களை உலகம் அறிவதற்கு வாய்ப்பு
கிடைத்துள்ளது.அயல்நாடுகளில் வாழும் தமிழர் எவ்வாறு தங்கள் சூழ்நிலையில்
கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் குறித்த புதிய பரிமாணங்களை
வெளிப்படுத்தலாம் என்பதைச் செயலில் காட்டும் வழிகாட்டியாக இருப்பதற்கு க.
சுபாஷிணியைப் பாராட்டலாம். நூலுக்கு இத்துறையின் ஆய்வறிஞர்
ஆ.சிவசுப்பிரமணியன் முன்னுரை அளித்திருக்கின்றார். இந்த நூலால் நாம்
அறியும் செய்திகள் என்ன?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment