இந்து
மதச் சாத்திரங்கள் மக்களை வருண/சாதி ரீதியாகப் பிரித்து வைத்து உள்ளன
என்பதும், அந்த வருண/சாதி ஏற்றத்தாழ்வுகள் பிறவி அடிப்படையிலேயே
விதிக்கப்பட்டு உள்ளன என்பதும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மைகள்.
ஆனால் பார்ப்பனர்கள் “இல்லையே! வருண/சாதிப் பிரிவுகள் பிறவி அடிப்படையில்
இல்லையே! அவை குணத்தின் செய்கையின் அடிப்படையில் தானே நிர்ணயிக்கப்பட்டு
உள்ளன?” என்று கொஞ்சமும் கூசாமல் வாதம் செய்கின்றனர்.
“குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான்
நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செய்கை யற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே
அவற்றைச் செய்தேன் என்றுணர்”
என்ற பகவத்கீதையின் 4வது அத்தியாயத்தின்
13வது செய்யுளை மேற்கோள் காட்டி உரக்கக் கூவுகின்றனர். பார்ப்பனர்களின்
இந்த இரைச்சலுக்கு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் பலர் மயங்கி / குழம்பி
விடுகின்றனர். இந்த மயக்கம் குழப்பம் இருக்கும் நிலையிலயே “வருணம்/சாதி
பிறவி அடிப்படையில் இல்லாமல் குணத்தின், செய்கையின் அடிப்படையில்
இருக்கும்போது இடஒதுக்கீடு சாதி அடிப்படையில் இருப்பது தவறு” என்ற
நச்சுக்கருத்தை/நச்சுச்சிந்தனையை மக்கள் மனதில் விதைக்க முற்படுகின்றனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment