உயிரினங்களின், அவற்றின் பரிணாம
வளர்ச்சியின் அடிப்படையான மூலக்கூறு டிஎன்ஏ எனப்படும் டிஆக்சி ரிபோ
நியூக்ளிக்அமிலம். இயற்கையில் நான்கு நியூக்ளியோடைட்கள் கொண்ட டிஎன்ஏ இல்
மாறுதல் செய்து, மேலும் நான்கு நியூக்ளியோடைட்களை இணைத்து 8
நியூக்ளியோடைட்கள் கொண்ட செயற்கை டிஎன்ஏ இரட்டைச்சுருள் வடிவ இழைகளை
உருவாக்கியுள்ளனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.
இந்தப் புதிய அறிவியல் கண்டுபிடிப்பான
செயற்கை டிஎன்ஏ க்கு, ‘ஹச்சிமோஜி டிஎன்ஏ’ (Hachimoji DNA) என்ற பெயர்
சூட்டப்பட்டுள்ளது. இது ஹோஷிக்கா குழுவினரின் ஆய்வறிக்கையாக சயின்ஸ்
ஆய்விதழில் வெளியாகியுள்ளது. ஹச்சிமோஜி (ஹச்சி=8; மோஜி=எழுத்து) என்றால்
ஜப்பானிய மொழியில் ‘எட்டெழுத்து’ என்று பொருள்.
வேற்றுக்கோள்களில் உயிரினங்கள் இருப்பின்
அவை இவ்வுலக உயிரினங்கள் போலவே AGCT நியூக்ளியோடைட்களை உடைய டிஎன்ஏ வைக்
கொண்டிராமல், அவை வாழும் கோள்களின் தன்மைக்கு ஏற்ப வேறுபட்டிருக்கக்கூடும்
என்ற கோணத்தில் ஆராயும் பொருட்டு அமெரிக்க வானவியல் ஆய்வுமையமான நாசா இந்த
ஆய்வுக்கு நிதி நல்கியுள்ளது. அமெரிக்காவின் பல ஆய்வகங்களும் பங்கு பெற்ற
இந்த ஆய்வை விஞ்ஞானி ஸ்டீவன் பென்னர் தலைமையேற்று வழி நடத்தினார். இவர்
இதற்கு முன்னர் 6 நியூக்ளியோடைட்கள் கொண்ட ஒரு செயற்கை டிஎன்ஏ ஒன்றையும்
உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment