2019 – ஆம் ஆண்டிற்கான மக்களவைத்
தேர்தலும், தமிழகத்திற்கான 18 தொகுதிகளின் இடைத்தேர்தலும் ஒருசேர அடுத்த
இரு மாதங்களில் அதாவது, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறயிருக்கின்றன.
இது நமக்குக் கிடைத்திருக்கும் பொன்னானதொரு வாய்ப்பு. இதனை நாம்
நல்லமுறையில், பயன்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தற்போதைய இந்திய அரசியல் சூழலில், தமிழ்நாடு அரசியல் சூழலில், மக்கள்
வாக்களிக்கும் இந்த தேர்தல் தருணம் மிகவும் முக்கியமானது. இதனை மக்கள்
மிகவும் கவனமாக சிந்தித்து, செயல்படுத்தவேண்டிய நிர்பந்தத்தில்
இருக்கிறார்கள். வருங்காலத்தில் தங்கள் சந்ததியினர் எதிர்கொள்ளும் வாழ்க்கை
முறையை தீர்மானிக்கும் கட்டத்தில் இருக்கிறார்கள். இதை உணர்ந்து மக்கள்
யாரை வெற்றிபெற செய்ய வேண்டும், யாரை படுதோல்வியடைய வைக்க வேண்டும்
என்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். எந்தக்கட்சி வெற்றிபெறுகிறது
என்பதைவிட, எந்தக்கட்சி வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதில் ஒரு தெளிவு
இருக்கவேண்டும். மத்தியில் பா.ச.க-வும், மாநிலத்தில் அதனுடன் கூட்டணி
வைத்திருக்கும், அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் படுதோல்வியை
காணவேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
ஏன் பா.ச.க மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது..?
பா.ச.க வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்கான காரணங்கள் மட்டுமே அதிகளவில் நம் முன்னே இருக்கின்றன!
முதலில் மனிதகுலம் காப்பற்றப்பட வேண்டும். பசுமாட்டிற்கு கொடுக்கப்படும் மரியாதை மனிதனுக்கு இங்கு கொடுக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய அவலநிலை. கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக சாதிரீதியாகவும், கடந்த சில நூற்றாண்டுகளாக மத ரீதியாகவும், நம்மை பிரித்தாளும் வேலையை செய்துமுடித்த ஆரியம், அடுத்தகட்ட நடவடிக்கையான, தங்களின் மனுதர்ம ஆட்சியை நிறுவுவதற்கு துடித்துக்கொண்டிருந்தது. அதனை கடந்த 5 ஆண்டுகளில் பாதிக்கு மேல் அதனை செய்தும் விட்டது. மீண்டும் ஒருமுறை ஆட்சி, அதிகாரம் கிடைத்துவிட்டால், முழுவதையும் செய்துவிடும் என்பது மட்டும் உறுதி!
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment