திருமதி சிநேகா சாதியில்லாச் சான்றிதழைப் பெறுகிறார்
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச்
சேர்ந்தவர் திருமதி எம்.ஏ.சிநேகா. இவருடைய பெற்றோர்கள் சாதி மத
நம்பிக்கைகளைக் கடந்த மனிதநேயச் சிந்தனையாளர்கள். இவரும் பெற்றோர்கள்
வழியில் சாதி மத நம்பிக்கைகள் இல்லாமல் வளர்ந்து, சட்டப்படிப்பை முடித்து,
வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். இவருடைய கணவரும், தமிழ்ப் பேராசிரியருமான
திரு பார்த்திபராசாவும், சாதி மத நம்பிக்கைகளைத் துறந்தவரே.
திருமதி சிநேகா 2010-ஆம்ஆண்டு முதல், தான் எந்த சாதியையும் மதத்தையும் சாராதவர் என்று சான்றிதழ் வழங்கும்படி கேட்டுப் போராடினார்.
இதற்கு முன் இதுபோன்ற சான்றிதழ்
வழங்கப்படவில்லை என்று கூறி அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுக் கொண்டே
இருந்தது. 2017-ஆம்ஆண்டு முதல் அவர் ஒவ்வொரு அதிகாரியையும் நேரில்
சந்தித்து விளக்கம் அளித்ததன் பயனாக 5.2.2019 அன்று அவருக்கு இந்தச்
சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒரு சான்றிதழ் பெற்றதன் மூலம் சமூக
முன்னேற்றத்தில் ஒரு படி ஏறி உள்ளதாக அவர் 13.2.2019 அன்று கூறினார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment