கற்பெனப்படுவது யாது எனின் அது சொற்றிறம்பாமை !! அதவாது சொல் தவறாமை.
இன்னும் விளக்கி சொல்ல வேண்டும் என்றால் நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு
விரோதமில்லாமல் இருப்பது என்ற கருத்துகள் கொண்டதாக இருக்கின்றது என்கிறார்
பெரியார். கற்பு என்பதை பகுபதமாக்கி பார்க்கின்றபோது கல் -கற்பு என்கின்ற
இலக்கணம் சொல்லப்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் அந்த சொல்லை பகாப்பதமாக
(பிரித்தால் பொருள் தராதது) மகளிர் நிறை என்று காணப்படுகின்றது. இந்த
இடத்தில் மகளிர் என்பது பெண்களையே குறிக்கும் பதமாக எப்படி ஏற்பட்டது என்று
விளங்கவில்லை என்கிறார். கற்பு என்பதற்கு அழிவில்லாதது, உறுதியுடையது
என்கின்ற பொருள்கள் உண்டு. அழிவில்லாதது என்கின்ற சொல்லுக்கு, உண்மையான
கருத்துப் பார்க்கும்போது, சுத்தமான அதாவது கெடாதது, மாசற்றது
என்பதாகத்தான் கொள்ளலாம். இந்த சுத்தம் என்ற சொல்லும் ஆங்கிலத்தில் கெடாதது
என்கின்ற கருத்தில்தான் காணப்படுகின்றது. அதாவது chastity என்கிற ஆங்கில
சொல்லுக்கு virginity என்பதே பொருள். அதை அந்தப் பொருளின்படி பார்த்தால்
இது ஆணுக்கென்றோ அல்லது பெண்ணுக்கென்றோ சொல்லாமல் பொதுவாக மனித
சமூகத்திற்கே – எவ்வித ஆண், பெண் புணர்ச்சி சம்மந்தமே சிறிதும் இல்லாத
பரிசுத்த தன்மைக்கே உபயோகப்படுத்தி இருப்பதை காணலாம். ஆகவே கற்பு என்பது
பெண்களுக்கு மாத்திரமானது அல்ல, குறிப்பாக ஆணோ, பெண்ணோ ஒரு தடவை கலந்த
பின்பு எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் கற்பு போய்விடுகிறது என்கின்ற கருத்தை
கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment