ஒரு ஊரில் இரண்டு செல்வந்தர்கள்
இருந்தார்கள். இருவரும் நறுமணப்பொருட்கள் வாசனைத் திரவியங்கள் முதலானவற்றை
ஏற்றுமதி செய்து பெருஞ்செல்வம் ஈட்டிவந்தார்கள். இருந்தாலும் முதலாவது
செல்வந்தரைக் காட்டிலும், இரண்டாவது செல்வந்தருக்கே ஊர் மக்களிடம் மதிப்பு,
மரியாதை இருந்தது. இது குறித்து முதலாவது செல்வந்தர் பெரிதாக
கண்டுகொள்ளாமல் இருந்தார்.
நாட்கள் நகர்ந்தன. இரண்டாவது செல்வந்தரை
சிறந்த சமூக செல்வாக்கு உள்ளவராக அரசன் தேர்வு செய்தான். அதற்கான விருது
வழங்கும் விழாவில் முதலாவது செல்வந்தரும் கலந்துகொண்டார். விழாவில்
இரண்டாவது செல்வந்தரிடம் மன்னர் காட்டிய பரிவும் அன்பும் முதலாவது
செல்வந்தர் மனத்தில் பொறாமையை உண்டு செய்தது. இருவருமே ஏற்றுமதி
வணிகத்திற்காக அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். சொல்லப்போனால் முதலாவது
செல்வந்தரே இரண்டாமவரைக் காட்டிலும் கூடுதல்வரி செலுத்துகிறார். அரசுக்குக்
கூடுதல் வருவாயை ஈட்டித்தரும் தன்னைக் காட்டிலும் அவர் எந்த விதத்தில்
உயர்ந்தவர் என்ற எண்ணம் முதலாவது செல்வந்தருக்கு வந்தது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment