புதுப் பணக்காரர்களும், புதிதாக மதம்
மாறியவர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் அதீத அவசரத்தையும்,
நிதானம் இன்மையையும் காட்டுவது இயல்பு. இதேபோல் சமதர்ம சமூகத்தில் இருந்து
முதலாளித்துவ முறைக்கு மாறிய இரஷ்யர்கள் முதலாளித்துவ விளம்பர முறையில்
நிதானமற்ற ஒரு புதிய உத்தியைப் புகுத்த முனைந்து இருக்கிறார்கள். தொடங்கு
ஏவுகலன் (StartRocket) என்ற இரஷ்ய நாட்டுத் தனியார் நிறுவனம் வணிக
விளம்பரம் செய்வதற்காகச் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் திட்டம் ஒன்றை
வகுத்து உள்ளது. இதைப்பற்றி அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி
விளாட்சிட்னிகோவ் (Vlad Sitnikov) 2021ஆம் ஆண்டுக்குள் 200 சின்னஞ்சிறிய
செயற்கைக் கோள்களை விளம்பரம் செய்வதற்காக விண்ணில் ஏவ திட்டமிட்டு
இருப்பதாகத் தெரிவித்து உள்ளார். இக்கோள்கள் பூமியில் இருந்து 500 கி.மீ.
தொலைவில் நிறுத்தப்படும் என்றும், இவை வணிக நிறுவனங்களின் விளம்பரப்
பலகைகளாக இருக்கும் என்றும், இரவு நேரங்களில் ஒரு விளம்பரத்தை ஆறு
நிமிடங்கள் வரை மிளிர வைக்கலாம் என்றும் திட்டமிட்டு இருப்பதாகவும் அவர்
கூறினார்.
இதன் மூலம் விளம்பர உத்தியை
விண்வெளிக்குக் கொண்டுசெல்ல இரஷ்யாவின் தனியார் நிறுவனம் திட்டமிட்டு
உள்ளது. இவ்வாறு விளம்பரங்களை விண்வெளிக்குக் கொண்டு செல்வதால் விளம்பரச்
செலவுகள் கூடி, பண்டங்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment