6.6.1946 முதல் 10.3.1978 வரை விடுதலை
ஏட்டின் பொறுப்பாசிரியராக, அச்சிடுபவராக, வெளியிடுபவராக விளங்கியவர் அன்னை
மணியம்மையார். ஒரு ஏட்டின் ஆசிரியர்களாக பலர் இருக்கலாம்; ஆனால்
பொறுப்பாசிரியர் ஒருவர் தான். 32 காலம் ஒரு ஏட்டின் பொறுப்பாசிரியராக
விளங்கியவர் அன்னை மணியம்மையார் அவர்கள். வெறும் பெயரளவில் மட்டுமல்லாது,
அரசு விடுதலை ஏட்டின் மீது நெருக்கடி தரும் போதெல்லாம் அதனை ஏற்று சிறை
சென்றவர் மணியம்மையார் அவர்கள்.
அது மட்டுமல்ல பெரியாரின் உரைகள்
அனைத்தையும் நூல் வடிவில் கொண்டு வந்த பெருமை மணியம்மையாரையே சாரும். அய்யா
அவர்கள் ஒரு மாதத்தில் இருபது நாட்களுக்கு மேல் மேடைகளில் பேசினார். அந்த
பேச்சுகள் ஒவ்வொன்றையும் எழுத்து வடிவில் மக்களிடம் தவழவிட்டவர்
மணியம்மையார் அவர்கள்.
இதனை அய்யா அவர்களே, “அம்மா என்னிடம்
தொண்டராக வந்த பிறகு தான் என்னுடைய கருத்துகள் பல ஆயிரம் புத்தகங்களாக
வெளிவர முடிந்தது”, என்று எழுதியுள்ளார்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment