நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த தட்சிணாமூர்த்தி என்ற கருணாநிதி பிற்காலத்தில் கலைஞர் என்றே அழைக்கப்பட்டார்.சிறுவயதிலேயே அரசியலில் ஈர்க்கப்பட்ட கருணாநிதி பள்ளி நாட்களிலேயே மாணவ பேச்சாளராகவும், ‘தமிழ் மாணவர் மன்றம்’ என்ற ஒரு மன்றத்தையும் துவக்கியவர். ‘முரசொலி’ (1942) என்ற துண்டறிக்கை இதழையும் புனைபெயரில் பள்ளிநாட்களில் நடத்தியவர் கருணாநிதி. பிற்காலத்தில் வார இதழ், தினசரி என்ற பல உருமாற்றங்களையும் எதிர்கொண்ட முரசொலி இதழ்கள், 1962க்குப் பிறகு தடையின்றி வெளிவந்தது.
நம்நாடு என்ற இதழ் திமுக கட்சியின்
அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்த அக்காலத்தில், முரசொலி இதழ்கள் கருணாநிதியின்
கருத்துகளைத் தாங்கி வந்தன. அவரது அரசியல், இலக்கிய ஆளுமைக்கு அடையாளம்
முரசொலி இதழ் என்றால் மிகையன்று. ஒரு இயக்கத்தின் தலைவரின் குறிக்கோளை,
கொள்கையை, தொலைநோக்கை எதிரொலிக்கும் வகையில் தனது எழுத்தை நுட்பமாக
இதழ்களில் வெளியிடத் தெரிந்தவர் கருணாநிதி. மக்களை பத்திரிக்கைகளைப் படிக்க
வைத்த இயக்கம் திராவிட இயக்கம் என்று கூறப்படும் அளவிற்கு
பத்திரிக்கைகளைத் திராவிட இயக்க ஆதரவாளர்கள் துவக்கி வெளியிட்டுக்
கொண்டிருந்த காலத்தில் கருணாநிதியும் முரசொலியைத் தனது தனிப்பட்ட
பத்திரிக்கையாகத்தான் துவக்கினார். அது அன்று ஒரு கட்சியின் கொள்கை
பரப்பும் இதழ் என்ற தகுதியில் துவக்கப்படவில்லை. இன்று 75 ஆண்டுகளுக்கும்
மேலாக வெற்றிகரமாகக் கடந்துவிட்ட முரசொலி இதழ் கடந்து வந்த பாதையில் பல
சுவையான செய்திகள் உள்ளன. அவை தமிழகம் கடந்த அரசியல் மைல் கற்களாகவும்
அறியப்பட வேண்டியவை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment