தமிழ் மொழியின் இலக்கியப் பரப்பில்
காலத்தில் முற்பட்ட இலக்கியம் சங்க இலக்கியமாகும். பாண்டிய மன்னர்கள் தம்
தலைநகரங்களில் தமிழ் பேரவை அமைத்துத் தமிழ்மொழியின் இலக்கியப் பேரவை
அமைத்துத் தமிழ்மொழியின் இலக்கியப் பழைமையினைக் காத்தனர். இப்பேரவைப்
புலவர்களால் பாடப்பட்ட இலக்கியங்களின் தொகுப்புச் சங்க இலக்கியம் ஆகும்.
சங்க இலக்கியம்- வேறுபெயர்கள்
உயர்தனி இலக்கியம், சங்க இலக்கியம்,
சங்கத்தமிழ், சங்க நூல், சங்கப் பனுவல், சான்றோர் செய்யுள், செவ்வியல்
இலக்கியம், திணை இலக்கியம், திணைப்பாட்டு, தொகையும் பாட்டும்,
பண்டைத்தமிழ், பண்டைய இலக்கியம், பதினெண் மேற்கணக்கு, பழந்தமிழ் இலக்கியம்,
பழைமை இலக்கியம் என்றெல்லாம் சங்க இலக்கியம் வழங்கப்படுகின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment