Tuesday 25 June 2019

கூடங்குளம் அணு உலையில் சேகரிக்கப்படும், அணுக்கழிவின் பேராபத்தை உணர்வோம்!


siragu koodankulam1
தற்போது, தமிழ்நாட்டு மக்களாகிய நாம் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பல வழிகளிலும் பேராபத்து சூழ்ந்திருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. மீத்தேன், ஹைட்ரோகார்பன், 8 வழி சாலை, நியூட்ரினோ, கெயில் குழாய் பாதிப்பு, புதிய கல்விக் கொள்கை, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, குடிநீர் பிரச்சனை, தகுந்த பாதுகாப்பற்ற நிலையிலுள்ள கூடங்குளம் அணு உலை என ஏராளம் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போது நம் மீது தாக்கப்படும் பேராபத்து என்னவெனில், அணுக்கழிவை கொட்டுவதற்கான மையத்தை கூடங்குளம் அணு மின் நிலையத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எடுக்கப்பட்டிருக்கும் முடிவு மிகவும் விபரீதமான ஒன்றாக இருக்கிறது. அதற்கு முன்பாக, சற்று சுருக்கமாக கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

தமிழ் நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாகிய ஒரு திட்டத்தின் விளைவு தான் கூடங்குளம் அணு மின் நிலையம். இது 1988-ல், அன்றைய பிரதமர் திரு. ராஜிவ் காந்தியும், அப்போதைய ரஷ்ய நாட்டுப் பிரதமர் மிக்கைல் கார்பசேவ்வும் சேர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். ஆனால், அதன் பிறகு, ரஷ்யா பல நாடுகளாக பிரிந்த நிலையில், இந்தியா, அணுக்கரு வழங்கும் குழுமத்தின் ஒப்புதல் பெறவில்லை என்ற காரணத்தை கூறி அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. ஆதலால் இத்திட்டம் பத்தாண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. ஒன்றுபட்ட ரஷ்யாவின், உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் என்ற இடத்தில் நிறுவப்பட்டிருந்த அணுஉலை வெடித்து சிதறி, மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கி விட்டது. பல லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். இன்றளவும் கூட அதன் தாக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மக்கள் வாழ தகுதியற்ற இடமாக அது ஆகிவிட்டபடியால், மக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாறிவிட்டார்கள் என்ற வரலாறு நம் கண் முன்னே பதிவு செய்திருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment