புதிய கல்விக் கொள்கையின் வரைவு
அறிக்கையில், என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறன்றன என்று சரிவர
தெரிந்துகொள்ளாமலேயே, பலர் பலவாறு தங்களின் கருத்துகளை கூறிவருகின்றனர்.
இதை, அவசரமாக, போகிறபோக்கில், கல்வியில் புதுமை, முன்னேற்றம் என்று ஆதரவு
தெரிவித்து, அமல்படுத்துவது என்பது மிகவும் ஆபத்தானது என்பதை நாம் முதலில்
புரிந்துகொள்ள வேண்டும். இதனை, கல்வியாளர்கள் மத்தியில், கூர்ந்து படித்து,
புரிந்துகொண்டு, அதிலுள்ள அனைத்தையும் உணர்ந்து, அதற்கான விவாதங்கள்
நடைபெறவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
‘தேசிய கல்விக் கொள்கை – 2019’ என்ற
வரைவு, திரு. கஸ்தூரி ரங்கன் அவர்கள் தலைமையிலான குழு ஒன்று, 484 பக்கங்கள்
கொண்ட ஒரு அறிக்கை வரைவாக மத்திய அரசிற்கு அளித்துள்ளது. இது முற்றிலும்
ஆங்கில மொழியினால் எழுதப்பட்டிருக்கிறது. பா.ச.க ஆட்சியில் அமர்ந்த ஒரு
வாரத்திற்குள், மிக அவசரமாக செயல்படுத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளை
துவக்கியுள்ளது என்பதை பார்க்கும்போது, எதற்கு இந்த அவசரம் என்ற கேள்வி நம்
எல்லோர் மனதிலும் எழாமல் இல்லை. மேலும், இந்த அறிக்கை வரைவைப் பற்றி
கருத்துகள் கூறுவதற்கு கால அவகாசம் கொடுத்திருப்பதென்னவோ, 30 நாட்கள்
மட்டுமே. அதாவது ஜூன் 30 தேதிக்குள் தெரிவிக்கப்படவேண்டும் என்று நமக்கான
காலத்தை குறுகிய நேரத்தில் சொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment