குறுக்கும் நெடுக்குமான கோடுகளுக்கு
நடுவில் மங்களம் பாடுவதில் வல்லவர்கள். அவர்கள்தான் அவனை முதலில்
வரவேற்றனர். பார்ப்பதற்கு தம்மைப் போன்ற தோற்றப்பொலிவுடன் இருந்ததால் முதல்
சந்திப்பிலேயே கட்டித்தழுவி தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர். தான் யார்?
என்பதையும் ஏன் இந்த கோலத்தில் இந்தப் புள்ளியில் வந்து நிற்கிறேன்
என்றும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை என்பதை அவனால் அப்போது
நம்பமுடியவில்லை. குறைந்த பட்சம் தன்னுடைய பெயரையாவது கேட்பார்கள் என்று
மனதிற்குள் நினைத்தான். அவனுடைய கண்கள் எதிரிலிருந்த முகங்களை நோட்டம்
விட்டன.
கிணற்றில் இருந்து தண்ணீர்
எடுத்துக்கொண்டிருந்த பெண் மீது அவனுடைய பார்வை சென்ற போது,“பயில்வான்
பக்கிரிக்கு! தண்ணீர் கொடும்மா!” என்ற குரல் கனத்து ஒலித்தது.
அது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
தன்னுடைய பெயரை இவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள் என்று யோசித்து
முடிப்பதற்குள் விருந்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தான் பக்கிரி. இல்லை…
இல்லை… பயில்வான் பக்கிரி.
உணவைக் கையால் எடுத்து வாயில் வைக்கும்
சமயத்தில் லொல்! லொல்! என்ற சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் தன்னை
நோக்கித்தான் வருகிறதோ! என்ற சந்தேகம் பயில்வான் பக்கிரியின் மனதிற்குள்
இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவனாய் உணவை
சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment