தமிழ் இலக்கியங்களில் மருத்துவக்
குறிப்புகள் பல கிடைக்கின்றன. இதன் வழி தமிழர்கள் மருத்துவத்துறையிலும்
தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது தெரியவருகிறது. நூல்களுக்குப் பெயர்களே
மருந்தின் பெயர்களாக வைத்துள்ளனர். திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம்
போன்றன இதற்குச் சான்றுகள் ஆகும். மருந்துகளைப் பயன்படுத்தியதோடு மருத்துவ
முறைகளையும் தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனின்று கிளைத்ததே சித்த
மருத்துவம் ஆகும். ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளைப் போலத்
தமிழர்கள் பயன்படுத்திய மருத்துவ முறை சித்த மருத்துவம் எனப்படுகிறது.
இயற்கையில் கிடைக்கக் கூடிய எண்ணற்ற புல்,
பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம்,
வித்து முதலியவைகளைக் கொண்டும் நவரத்தின நவலோகங்களைக் கொண்டும் இரசம்
கந்தகம், கற்பூரம், தாரம் அயம், பவளம், துருசு முதலியவற்றைக்கொண்டும்
திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை,
கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கசாயங்கள் போன்றன கொண்டு செய்யப்படும்
மருத்துவ முறை சித்த மருத்துவம் ஆகின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment