சங்க காலப் புலவர்கள் அகம், புறம்
ஆகியவற்றைப் பாடுபொருள்களாகக் கொண்டு கவிதைகள் புனைந்தனர். அகம் என்ற காதல்
பொருளை மட்டும் பாடிய புலவர்கள் சிலர் உள்ளனர். அவ்வழியில்
குறிக்கத்தக்கவர் அம்மூவனார் ஆவார். இவர் நெய்தல் திணைப் பாடல்கள்
பாடுவதில் சிறப்பிடம் பெற்றவர் ஆவார். ஐங்குறுநூற்றுத் தொகுப்பில் நெய்தல்
பாடுவதற்குச் சிறந்தவர் அம்மூவன் என்ற அடிப்படையில் இவருக்கு நெய்தல் திணை
ஒதுக்கப்பெற்று அதற்குரிய பாடல்களை இயற்றினார். இவர் சேரநாட்டுத்
தொண்டியையும், பாண்டிய நாட்டுக் கொற்கையையும் பாடியவர் என்பதால் நாடுகள்
தோறும் அறியப்பட்டவராக விளங்குகிறார். திருக்கோவலூர் பற்றிய குறிப்பும்
இவர் பாடல்களில் காணப்படுகிறது. எனவே நாடுகள் தோறும் பயணித்து நல்ல
கவிதைகளை வழங்கிய பெருமைக்கு உரியவராக இவர் விளங்குகின்றார்.
அம்மூவனார் என்ற பெயரில் உள்ள “அம்” என்பது அடைமொழியாகவும், “மூவன்” என்பது உதவிகள் செய்யும் ஒருவரின் பெயராகவும் கொள்ளமுடிகின்றது.
பாட்டும் தொகையும்
இவர் பாடிய பாடல்களாக கிடைப்பன மொத்தம்
நூற்று இருபத்தேழு பாடல்கள் ஆகும். அகநானூற்றுத் தொகுப்பில் ஆறு
பாடல்களும் (10, 35, 140, 280, 370, 390) ஐங்குறுநூற்றுத் தொகுப்பில்
நெய்தல் திணை சார்ந்து நூறு பாடல்களும் (101-200), குறுந்தொகைத் தொகுப்பில்
பதினோரு பாடல்களும் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397,
401), நற்றிணைத் தொகுப்பில் பத்துப் பாடல்களும் (4, 35, 76, 138, 275, 307,
315, 327, 395, 397) அமைந்துள்ளன. இவை தொகுப்பு வகைப்பட்டு அமைந்த
வகைப்பாடு ஆகும். இன்னும் இவர் பாடல்களைப் பல்வகைப்படுத்த இயலும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment