பேரரசர் அசோகரால் கி.மு. மூன்றாம்
நூற்றாண்டில் வெட்டப்பட்ட கிர்னார் கல்வெட்டின் மூலம் மக்களுக்கு மருத்துவ
உதவிகள் வழங்கப்பட்டதை அறிகிறோம். அவ்வாறே சமணத்துறவிகள் தங்கள் பள்ளிகளில்
அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் ஆகியவற்றைச் செய்ததாக மதுரை
மாவட்டத்தின் மலையில் உள்ள பிராமி கல்வெட்டுகளால் அறிகிறோம். இக்கொடைகள்
முறையே உணவு, அடைக்கலம், மருத்துவம், கல்விக் கொடைகள் எனப் பொருள்படும்
(சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், பக்கம் 41). மிகக் குறைந்த அளவிலேயே தமிழ்நாட்டில் மருத்துவம்
பற்றிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
மருத்துவ மூலிகைகளைப் பயிரிடுவதற்கு
செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் போன்ற வரிகள் விதிக்கப்பட்டதையும்,
மருத்துவர்களுக்கு ‘மருத்துவப்பேறு’ என்ற நிலமானியம் கொடுக்கப்பட்டதையும்
பல்லவர் காலக் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளதை அறிய முடிகிறது (தமிழர்
நாகரிகமும் பண்பாடும், டாக்டர். அ. தட்சிணாமூர்த்தி, பக்கம் 366).
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment