தஞ்சை சரஸ்வதி மகால் நூலக ஓலைச்சுவடிகள்
யாவும் தமிழர் கலை, இலக்கியம், வாழ்வு, பண்பாடு, மரபு, மருத்துவம் குறித்த
தகவல் நிரம்பிய அரிய கருவூலங்கள். அவை சொல்லும் செய்திகள் பலவற்றை இன்றும்
வெளியுலகம் அறிந்திருக்கவில்லை என்பது நமது முயற்சியில் உள்ள
குறைபாட்டினைத் தெளிவாகவே காட்டுகிறது. 1980 ஆம் ஆண்டில் நடந்த உலகத்தமிழ்
மாநாட்டின் போதே ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க அரசால் நிதி ஒதுக்கப்பட்டது.
இருப்பினும் இன்றுவரை இப்பணியில்
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. நாற்பது ஆண்டு இடைவெளி
விழுந்துவிட்டது என்றால், அது ஏறக்குறைய இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டது
என்ற ஓர் அவல நிலை. பண்டைய தகவல்களைப் பொருள் அறிந்து புரிந்து
கொள்ளக்கூடிய முதிய அறிஞர் பலர் மறைந்திருப்பர். இளைய தலைமுறைகளுக்கு
ஓலைகளைப் படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் பயிற்சி
கொடுக்கப்பட்டதாகவும் நம்மால் அறியக்கூடவில்லை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment