செப்டம்பர் மாதம் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா இருபெரும் தலைவர்களின்
பிறந்த நாட்கள். திராவிடர் இயக்கங்களின் தொடர் வெற்றிகளுக்கு சமூகத்திலும் –
அரசியலிலும் வித்திட்டவர்கள். எவ்வாறு பிப்ரவரி மாதம் முழுவதும்
அமெரிக்காவில் கறுப்பின வரலாற்று மாதமாக கொண்டாடுகின்றார்களோ, அதே போன்று
செப்டம்பர் மாதம் முழுவதும் திராவிடர் வரலாற்று மாதமாக கொண்டாட வேண்டும்
என்று தொடர் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அதற்கான வரலாற்று தேவை
இன்றைய சூழலில் ஏற்பட்டிருக்கின்றது.
தந்தை பெரியார் அவர்களை பொறுத்தவரை
சுயமரியாதை இயக்கத்தை 1925 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் எதிர்ப்புகளில்
வளர்த்து – எதிர்ப்புகளையே உரமாக்கிக் கொண்டு தமிழ் மண்ணில் வேர் கொண்ட
இயக்கம். அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களிடத்தில் இயல்பாக இருந்த
அச்சமற்ற – கொள்கையில் சமரசமற்ற தன்மை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment