Wednesday, 30 October 2019

உழவுத் தொழிலே தலையாயது


siragu ulavu2
பல்வேறு முயற்சிக்குப் பின்னும் இவ்வுலகம் ஏரின் பின்னாகவே நிற்கிறது.  உழவுத் தொழில் செய்வோரே மற்றைத் தொழில் செய்வோருக்கும் உணவு அளித்தலால் அச்சாணி போன்றவர். உழுதுண்பவர் வாழ்நிலை சுதந்திரமானது. மற்றைத் தொழில் செய்வோர் உணவுக்கு உழவரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஆதலால் உழுதுண்பவர்களுக்கு இரந்து வாழும் வாழ்க்கை நிலை இல்லை. மாறாக ஈர்ந்து வாழும் வாழ்க்கை நிலை உடையவர். உழவர், கொடையின் கீழ் அரசர்களின் வெண்கொற்றக் குடைகளும், ஆண்டிகளின் தவக் குடைகளும் குடைபிடிக்கும் என வள்ளுவர் உழவு என்ற அதிகாரத்தில் கூறுவர். உழவுத் தொழிலையும், உழவரின் மேன்மையையும் கூறும் வள்ளுவர் வேளாண்மை என்னும் அதிகாரம் படைத்துக் குறள் பாடாதது ஏன்? என்ற வினா எழுகிறது. அத்துடன் வேளாண் வேளாண்மை ஆகிய சொற்களுக்கான பொருள் யாது? ஆகியவற்றிற்கான விடை தேடுவது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்காப்பியத்தில் வேளாண் எனும் சொல்:

தொல்காப்பியர் வேளாண் என்னும் சொல்லை மூன்று இடங்களில் கையாள்வர். ஒன்று தலைவன் கூற்றை மொழிகின்ற இடத்தில்,
“வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்”; (தொல். களவு:16:8)
என்றும், மற்றொன்று தோழி கூற்றில்,
“வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்”; (தொல். களவு:23:23)
என்னும் இருவிடங்களை நோக்குமிடத்து வேளாண் என்னும் சொல் கொடை என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. இதற்கு இளம்பூரணர் உபகாரம் என்றும் நச்சினார்க்கினியர் கொடுத்தல் என்றும் உரை கூறுவர். தொல்காப்பியர் மரபியலில் வேளாளருக்குரிய தொழிலைக் குறிக்கின்ற பொழுது,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment