திருவள்ளுவர் 46 குறட்பாக்களில் உயிரினம்
பற்றிய செய்திகளைக் கூறியுள்ளார். அனிச்சம், குவளை எனும் இருமலர்கள்
மட்டும் கூறப்பட்டுள்ளது. இதில் அனிச்சமலர் 4 முறை கூறப்பட்டுள்ளது.
நெருஞ்சிப்பழம் எனும் ஒரே பழவகையும் குன்றி மணி எனும் ஒரே விதையும் பனை,
மூங்கில் எனும் இரு மரங்களும் யானை 8 முறையும், பாம்பு 3 முறையும், ஆமை,
கொக்கு, முதலை, காகம், மீன், நரி, கவரிமான், பசு, காளை, சிங்கம், புலி,
ஆடு, குதிரை, முயல், அன்னம், மயில், ஒட்டகம், வாத்து, எருமை ஆகிய
உயிரினங்கள் குறட்பாக்களில் கூறப்பட்டுள்ளன. புல், பயிர், கொம்பு, கொடி,
மரம், மலர், காய், கனி, வித்து, மொட்டு எனத் தாவரங்களின் வகைகள் மற்றும்
வளர்ச்சிப்பருவங்கள் கூறப்பட்டுள்ளன. அன்புடைமை அதிகாரத்தில் 77வது குறள்
“என்பிலாதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்” எனும் குறளில் எலும்பு
இல்லாத உயிர்களான புழு போன்றவை வெயிலில் காய்ந்து அழிந்துவிடும். இதுபோல்
அன்பு இல்லாத உயிர் அறத்தினை செய்ய இயலாமல் துன்புறும் எனக் கூறியுள்ளார்.
இக்குறளின் மூலம் விலங்குகளில் எலும்பு உள்ளவையும் எலும்பு அற்றவையும்
உள்ளன என்பதைக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment