நாவாய் (கப்பல்)
மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பண்டைத்
தமிழகக் கடற் பகுதி நெய்தல் நிலம் எனப்பட்டது. கடலை நம்பி வாழ்ந்த மக்கள்
கலம் செலுத்துவதிலும் வல்லவர்களாயிருந்தனர். காவிரிப் பூம்பட்டினமும்,
கொற்கையும், முசிறியும் தலைசிறந்த துறைமுக நகரங்களாக இருந்தன.
பழங்காலத்தில் இந்திய நாட்டின் ஏனைய பகுதிகளை விடப் பழந்தமிழ் நாடே கடற்படை
ஆற்றலில் சிறந்திருந்தது என்பதை நிலவியல் ஆசிரியர்கள் எடுத்தியம்பி
உள்ளனர்.
புழந்தமிழ் தொழில்நுட்ப ஆற்றலைப்
புலப்படுத்தும் வண்ணம், அம்பிகள், முகப்பில் விலங்கு, பறவை, மனிதனின்
தலைவடிவங்கள் இடம் பெற்றன. கட்டுமரம், தோணி, ஓடம், பஃறி, பரிசல், படகு
திமில் முதலியன சிறுசிறு தொழில்புரியப் பயன்பட்டன. கலங்கள் பெரும்
பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. நீர் விளையாடவும், பொழுது போக்கவும்
சங்ககால மக்கள் புணை, தெப்பம் மிதவை முதலானவைகளையும், பறவைமுக அம்பிகளையும்
பயன்படுத்தினர். பெரும் அகழிகளையும் ஆறு, கடல் முதலானவற்றையும் கடப்பதற்கு
போர்க் காலங்களிலும் அரிமுக அம்பி, கரிமுக அம்பி, பரிமுக அம்பி, புலிமுக
அம்பி ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment