சம்பூகன் எனும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச்
சேர்ந்த ஓர் இளைஞன் தவம் செய்ததால் ஒரு பார்ப்பன இளைஞன் மரணம் அடைந்து
விட்டதாகக்கூறி, சம்பூகனை இராமன் தலைகீழாகத் தொங்கப்போட்டு, கழுத்தை
வெட்டிக்கொன்றார். இதே போன்ற நிகழ்வு ஒன்று ஒரிசா மாநிலம், மல்கங்கிரி
மாவட்டம், இண்டகுடா கிராமத்தில் நடைபெற்று உள்ளது.
யாகங்கள் செய்வதினாலும், மந்திரங்களை
உச்சரிப்பதினாலும் ஒரு நரை மயிரைக் கருப்பாக்கக்கூட முடியாது. ஆனால்
இவற்றினால் அரிய பெரிய நன்மைகள் கிடைக்கும் என்று நம்பும் ஒரு பெரும்மக்கள்
திரள் நம்மிடையே இருக்கவே செய்கிறது. கூடவே இந்த யாகங்களையும்
மந்திரங்களையும் பார்ப்பனர்களும் பார்ப்பனர்களின் “ஒப்புதல்” பெற்றவர்கள்
மட்டுமே செய்யவேண்டும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். அதிலும் சாதிப்படி
நிலையில் தங்கள் சாதியைவிட உயர்ந்த சாதியில் உள்ளவர்கள்தான் இவற்றைச்
செய்யத் தகுதி பெற்றவர்கள் என்று மனமார நம்புகிறார்கள். அதுகூடப்
பரவாயில்லை. தங்கள் சாதியைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்கள் இவற்றைச் செய்தால்
கோபம் பொத்துக் கொண்டுவந்து விடுகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment