கரிசல் மண் சார்ந்த எழுத்தாளர் மேலாண்மை
பொன்னுச்சாமி ஆவார். மேலாண்மறைநாடு என்ற சிற்றூரில் பிறந்து, ஓரளவிற்குப்
பள்ளிக் கல்வி பெற்று, தன் இலக்கிய வாசிப்புத் திறனால் எழுத்தாளராக
உருவானவர். தன் சிறுகதைப் படைப்புகளுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற
இவர் தன் கதைகளில் பல சமுதாய விழுமியங்களை வெளிப்படுத்தியுள்ளார். கூலித்
தொழிலாளர் தம் நேர்மை, போராடுபவர்களின் வெற்றி, பெண்களின் மேன்மை,
மக்களிடம் காணப்படும் மனிதத்தன்மை போன்றன இவரின் கதைகளில் விழுமியங்களாக
வெளிப்பட்டு நிற்கின்றன. இவரின் கதைகளில் கரிசல் மண் சார்ந்த மனிதர்களின்
தன்மைகள், கரிசல் மண் சாரந்த புழங்கு பொருள்கள், கரிசல் வட்டார வழக்குகள்
போன்றன இயல்பாக அமைந்துள்ளன. இவரின் கதைகள் வழியாக சமத்துவமாக, தேமற்ற
சமுதாயத்தை காணும் இவரின் விருப்பத்தை அறிந்து கொள்ளமுடிகின்றது.
மானாவாரிப் பூ, பூக்காத மாலை, மின்சாரப்பூ
போன்றன இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகள் ஆகும். மின்சாரப்பூ
என்பது இவரின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற சிறுகதைத்தொகுப்பாகும்.
மின்சாரப்பூ தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் காணலாகும் சமுதாய விழுமியங்கள்
குறித்த செய்திகளை இக்கட்டுரைத் தொகுத்து ஆராய்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment