இக்குறவஞ்சி சொல்நலம், பொருள் நலம், உவமை
நலம் பெற்று விளங்குவதுடன் குன்றக்குடி கோயில், மடம் ஆகியன பற்றிய பல
வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் குன்றக்குடியைச் சுற்றியுள்ள
வயல்களின் பெயர்கள், அங்கு திரிந்த கொக்குகளின் வகைகள், குன்றக்குடி மட
வரலாறு, குன்றக்குடி சந்நிதானப் பெருமை போன்ற பலவற்றையும் அழகுபட
மொழிகின்றது. குறவஞ்சிக்கான இலக்கணக் கட்டமைப்பு மாறாமலும் அதேநேரத்தில்
குன்றக்குடி பற்றிச் சொல்லவேண்டிய செய்திகளை சொல்லிய நிலையிலும்
இக்குறவஞ்சி குறவஞ்சிவ கை வரலாற்றில் குறிக்கத்தக்கதாக விளங்குகிறது.
இக்குறவஞ்சி தரும் வழிபாட்டு மரபுகள் பற்றிய செய்திகள் இக்கட்டுரையில்
தொகுத்து உரைக்கப்பெறுகின்றன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment