தி லான்செட் (The Lancet) என்ற மருத்துவ
வாரப் பத்திரிக்கை 1823ஆம் ஆண்டில் தாமஸ் வேக்லி (Thomas Wakely) என்ற
ஆங்கிலேய மருத்துவரால் இலண்டனில் தொடங்கப்பட்டது. இன்று இது இலண்டன்,
நியூயார்க், பெய்ஜிங் ஆகிய நகரங்களில் இருந்து வெளிவந்து கொண்டு
இருக்கிறது. இதில் மருத்துவ அறிவியல் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம்
பெறுகின்றன. அண்மையில் உலக சுகாதார நிறுவனம் (WHO), பல்கலைக் கழகக்
கல்லூரி, இலண்டன், (University College, London), திசுங்குவா பல்கலைக்
கழகம், பெய்ஜிங் (Tsinghua University, Beijing) உட்பட உலகின் மிக உயர்ந்த
33 நிறுவனங்களைச் சேர்ந்த 120 நிபுணர்கள் ஆராய்ந்து எழுதிய கட்டுரை ஒன்று
இதில் வெளியாகி உள்ளது. இது புது தில்லியில் 13.11.2019 அன்று
பத்திரிக்கையாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இக்கட்டுரையில், புவி வெப்ப உயர்வு
தெடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது என்றும், இதன் காரணமாக, உணவு தானிய
உற்பத்தி 2% குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் புவி
வெப்ப உயர்வு, ஏழை நாடுகளில் உள்ள குழந்தைகளின் உடல் நலத்தை மட்டும் அல்ல,
பணக்கார நாடுகளின் குழந்தைகளின் உடல் நலத்தையும் ஏற்கனவே பாதித்து உள்ளது
என்றும், இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் உலகில் உள்ள குழந்தைகளின் உடல்
நலம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment