திருநெல்வேலிச் சீமை கிழக்கு பாளையம்,
மேற்கு பாளையம் என்று இரு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கிழக்கு
பாளையத்தினை கட்டபொம்மனின் பாட்டனார் ஆட்சி செய்து வந்தார், மேற்கு
பாளையத்தினை மறவர் இனத்தினைச் சேர்ந்த புலித்தேவரின் முன்னோர்கள் ஆட்சி
செய்து வந்தனர். வாரிசு உரிமைப் போட்டியில் ஆற்காடு நவாப்க்கு உதவிய
ஆங்கிலேயர்களுக்கு கைமாறாகவும், அவர்களிடம் வாங்கிய கடனைத் திருப்பி
அடைப்பதற்காகவும், திருநெல்வேலி மற்றும் தென்னகத்தில் வரி வசூல் செய்யும்
உரிமையும், அதனைச் சார்ந்த ஓர் ஒப்பந்தமும் ஆங்கிலேயர்களிடம் ஆற்காடு நவாப்
கொடுத்தார். தென்னகத்தில் புலித்தேவரிடம் முன்பே வரி வசூல் செய்ய
முடியாமல் திணறிய நவாப், அவரின் மீது போர் தொடுத்தும் அதில் தோல்வி
அடைந்தும் இருந்தார். எனவே இந்த சிக்கலான பகுதியில் நம்மால் வரி வசூல்
செய்ய முடியாது, இதனை எப்படி சமாளிப்பது என்று இருந்தவர், இந்தப்
பகுதிகளின் வரியை ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என்று
ஆங்கிலேயர்களுக்கு கொடுத்தார் ஆற்காடு நவாப்.
இந்த
ஒப்பந்தத்தினை அடிப்படையாகக் கொண்டு, வியாபாரத் தொழிலுக்காக இங்கு வந்த
அன்னியர்கள் நமது நாட்டில் வரி வசூல் செய்ய முதல் அடித்தளமாக இந்த
ஒப்பந்தம் அமைந்தது. நவாப்பிடம் உரிமை பெற்ற வெள்ளையர்கள், தென்னகத்தில்
வரிவசூல் செய்யும் எண்ணத்துடன், மறத்தமிழர் புலித்தேவரின் வீரத்தினை
அறியாமல் அவரிடமும் வரிவசூல் செய்ய அலெக்ஸாண்டர் கெரான் என்பவன் தலைமை
ஏற்று புறப்பட்டான். இவன் வரி வசூல் செய்ய படையுடன் தென்னகம் வருகிறான்
என்ற செய்தி கிடைத்ததும் தென்னகத்தில் இருந்த சில பாளையத்துக்காரர்கள்,
அவனை வரவேற்று வரி செலுத்தினர். வீரபாண்டி கட்டபொம்மனின் முன்னோர்களும்
இவனுக்கு வரி கொடுத்தனர். மேற்கு பாளையத்துக்குச் சென்றான் புலித்தேவரிடம்
வரி கேட்டான். “பிழைப்புக்கு வந்த அன்னியர்கள் நீங்கள், உங்களுக்கு நான்
எப்படி வரி செலுத்துவேன், வரி என்ற பெயரில் ஒரு நெல்மணியைக்கூட நீங்கள்
கொண்டு செல்ல முடியாது என்றார் புலித்தேவர். உடனே ஆங்கிலேயரின் படையை தலைமை
ஏற்று வந்த கெரான் “வரி என்ற பெயருக்காகவாவது ஒரு சிறு தொகையை கப்பமாக
உங்கள் பாளையம் கொடுத்தால் போதும்” என்று கூறினான். புலித்தேவரின் காலில்
விழவில்லை, மற்றபடி அனைத்து வழிகளிலும் புலித்தேவரிடம் எவ்வளவு மன்றாடிக்
கேட்டும், புலித்தேவர் வரி கொடுக்க மறுத்துவிட்டார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment