Thursday 27 August 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-3

puli thevar10
புலித்தேவர் கோட்டையை தகர்க்க முடியாமல் தோல்வி அடைந்து திருச்சி திரும்பிய ஆங்கிலப்படைத் தளபதி கெரான் மற்றும் நவாப்பின் படையினர் அவமானத்தின் உச்சிக்கே சென்றனர். புலித்தேவரின் கோட்டையில் சிறு விரிசலைக் கூட ஆங்கிலேயரின் பீரங்கி குண்டுகள் ஏற்படுத்த முடியவில்லை. அவரின் கோட்டை மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. புலித்தேவர் கோட்டையை பனை ஓலை, பனை நார், சுண்ணாம்பு, வரகு, குதிரை வாலி, கடுக்காய், பதநீர், முட்டை, பெரிய சிறிய கூழாங்கற்கள், கருப்பட்டி, தானியங்களின் வைக்கோல்கள், கம்பப் பசை மற்றும் பல்வேறு பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டது. அந்நாட்களில் நமது தமிழ் மன்னர்கள் கோட்டைகளை இம்முறையிலேயே கட்டினார்கள். எனவே தான் அந்நியனின் பீரங்கிக் குண்டுகளினாலும் சேதம் அடையாமல் நமது மன்னர்களின் வீரநெஞ்சம் போன்று, கோட்டை சுவரும் கம்பீரமாக நின்றது.
புலித்தேவர் அந்நியர்களை விரட்டி அடித்த செய்தி தென்னகம் எங்கும் காட்டுத் தீ போன்று பரவியது. புலித்தேவரின் புகழ் மற்ற பாளையங்களிலும் உயர்ந்தது. புலித்தேவர், மறவர் பாளையங்கள் அனைத்தையும் ஒரு அணியில் சேர்த்து, அந்நியர்களை நம் மண்ணில் இருந்து விரட்ட திட்டமிட்டார். தமது நெற்கட்டான் செவ்வல் கோட்டையை மேலும் வலிமை உடையதாக மாற்றினார். மேலும் ஊத்துமலை, பனையூர், வாசுதேவநல்லூர், கொல்லங்கொண்டான், களக்காடு போன்ற இடங்களில் கோட்டையைக் கட்டினார். இதில் களக்காடு இயற்கை பாதுகாப்பைக் கொண்டது, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்தது, இதன் அருகில் பேயாறு ஓடியது. கோட்டையின் அருகில் இருந்த அடர்ந்த காடுகளைத் தாண்டி கோட்டையை நெருங்குவது என்பது, அந்நியர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment