இது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம்.
மதுரையில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி,
அவர்களுக்குப் பின் வந்த அவர்களது வாரிசுகளில் சிறிது சிறிதாக மாற்றம்
ஏற்பட்டு, இறுதியில் பாண்டிய வம்சத்தின் ஆட்சி முடிவுற்று, நாயக்க
மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. தமிழ்நாடு, சங்க காலத்தில் 24 கோட்டங்களாகப்
பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று புலியூர் கோட்டம். பூலியூர்க் கோட்டமே
புலியூர்க் கோட்டமாக வழங்கியிருக்க வேண்டும். பாண்டிய அரசர்களால், பாண்டிய
நாடு 32 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு
பாளையம்தான் நெற்கட்டான் செவ்வல் பாளையமாகும். பாண்டிய மன்னர்களினால்
பாளையங்களின் அரசராக புலித்தேவரின் முன்னோர்கள் நெற்கட்டான் செவ்வல்
பகுதியை ஆட்சி செய்து வந்தனர்.
பாண்டியரின் மறைவுக்குப் பிறகு,
நாயக்கரின் ஆட்சி தொடங்கியதும் நாயக்க அரசர்களுக்கு ஒரு சிறு அச்சம்
இருந்தது. பாண்டிய வாரிசுகள் மீண்டும் படையெடுத்து பாண்டிய நாட்டை
கைப்பற்றிவிடுவார்களே என்று எண்ணி, தனது ஆட்சிக்குட்பட்ட நிலங்களை 72
பாளையங்களாகப் பிரித்தனர். அதில் ஒரு பாளையமாக நெற்கட்டான் செவ்வல் பகுதி
இருந்தது. இது போன்று பாளையங்களைப் பிரிக்க நாயக்க அரசுக்கு அவர்களின்
அமைச்சர் அரியநாத முதலியார் ஆலோசனை தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment