இன்றும்கூட
நம்நாடு முழு படிப்பறிவை எட்டிய நாடு அல்ல. எல்லாத் துறைகளிலும் அறியாமை
நமக்கு இருந்தாலும் கூட, மருத்துவ துறையில் பொதுமக்களுக்கு தற்குறித்தனம்
அதிகமாகவே உள்ளது.
பிள்ளைகள் 30 வயது வரும் வரை கூட அவர்களை
பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டில்தான் வளர்க்கின்றனர். மருத்துவத்தில் கூட
ஏதாவது தீவிர நோய் நிலையில்தான் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு
ஓடுகிறார்களே தவிர மற்றபடி ஏதாவது உடல் பிரச்சனை வந்தால், “ பெரியப்பா
சொன்னார்…., சித்தி சொன்னார்… “ என்று மருத்துவம் ஆரம்பிக்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை பெரியப்பாதான் பொது
மருத்துவர், அவர் ஒரு சிறப்பு மருத்துவரைப் பரிந்துரைப்பார். அந்த சிறப்பு
மருத்துவர் யார் தெரியுமா? ஏற்கனவே அந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
எடுத்துக்கொண்ட ஒன்றுவிட்ட சித்திதான் அந்த சிறப்பு மருத்துவர். இப்படியாக
நோய் முற்றும் வரை சிகிச்சை தொடரும். இவர்களைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட
நோய்க்கு ஒரு குறிப்பிட்ட மருந்து உள்ளது, அதை எடுத்துக் கொண்டால் அந்த
நோய் குணமாகிவிடும் என நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. நோய் வேறு,
நோயாளி வேறு.
நோய்க்கும் நோயாளிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது மிகவும் அடிப்படையான ஒன்று. அதை விளக்குவதற்கே இந்தக் கட்டுரை.
ஒரு நோயை உதாரணமாக வைத்து நோய்க்கும் நோயாளிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறேன்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment