இப்போதெல்லாம் இயற்கை மருத்துவம், இயற்கை
விவசாயம், இயற்கை உணவு என்று பேசுவது வாடிக்கையாகிவிட்டது. என்ன புரிகிறதோ
இல்லையோ இதைப்பற்றி பேசுவதும், கேட்பதும் சிலருக்கு ஒருவித மகிழ்ச்சியைத்
தருகிறது.
இயற்கை என்றாலே ஏதோ இன்பமயமானது எனவும்,
செயற்கை என்றாலே ஏதோ கொடூர முகம் கொண்டது என்பது போலவும் ஒரு உருவகத்தை
இவர்கள் மனதில் ஏற்படுத்திக் கொள்கின்றனர். அது அப்படியல்ல என்பதை
விளக்கத்தான் இந்த கட்டுரை. ஒரு விளக்கத்திற்காக ஒரு நிகழ்ச்சியைக்
குறிப்பிடுகிறேன்.
ஒரு மரம் நிற்கிறது. – இது இயற்கை
வேகமாக காற்று வீசுகிறது – இது இயற்கை
அதனால் மரத்தின் ஒரு கிளை முறிந்து விடுகிறது – இது இயற்கை
இவை அனைத்தும் இயற்கைதானே. இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லையே.
அதைப் போலத்தான், பிறப்பு, இளமை, இன்பம், பிணி, மூப்பு, மரணம் இவை அனைத்தும் இயற்கைதானே. இவற்றில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லையே.
இவையெல்லாம் இயற்கை என்றால் இதில்
கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லையே. அப்படியிருக்க பிணி வந்தவுடன் ஏன் அதை
எதிர்த்து மருத்துவம் செய்ய வேண்டும்? நோய் ஒன்றும் செயற்கை இல்லையே…
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment