இந்திய
அரசின் முயற்சியால், குறிப்பாக பிரதமர் மோதி ஐக்கிய நாடுகள் பொது சபையில்
நிகழ்த்திய உரையின் அடிப்படையில் “அனைத்துலக யோகா நாளாக” ஆண்டுதோறும்
ஜூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐ. நா. சபை அறிவித்துள்ளது. தொடர்ந்து,
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும்
பரவச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்த இந்திய அரசு, ஜூன் 21, 2015 அன்று
முதல் அனைத்துலக யோகா நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களது
தலைமை டெல்லியில் கொண்டாடியது. இந்நிலையில் அமெரிக்காவில் யோகாவின்
பரவலைப்பற்றிய ஆய்வறிக்கை ஒன்றும் சென்ற மாதம் வெளியானது.
டன்
அண்ட் பிராட்ஸ்ட்ரீட் (Dun & Bradstreet) என்ற அமெரிக்க வணிக சேவை
நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வணிகநிறுவனங்களைப் பற்றிய
தரவுகளை சேகரித்து, அந்த நிறுவனங்களின் நிர்வாகத் தொடர்பு, நிதிநிலை போன்ற
முக்கியமான தகவல்களை கட்டண அடிப்படையில் தேவையானோருக்கு வழங்கும் தொழிலில்
ஈடுபட்டுள்ளது. இந்த ‘டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட்’ நிறுவனம், அமெரிக்காவில்
தொழில் நடத்திவரும் யோகா மற்றும் தியான நிறுவனங்களையும் (yoga and
meditation centers); “குத்தூசி மருத்துவம்” என அழைக்கப்படும் சீனாவின்
பாரம்பரிய மாற்றுமுறை மருத்துவ (ancient chinese acupuncture medical
practice – alternative medicine) நிறுவனங்களையும் பற்றி ஆராய்ந்தது.
ஒவ்வொரு அமெரிக்க நகரிலும் 10,000 பேருக்கு, இது போன்ற எத்தனை நிறுவனங்கள்
சேவைபுரிகின்றன என்ற தகவலைக் கொண்டு “சென்டெக்ஸ்” (Zen-dex) என்ற
குறியீட்டை உருவாக்கி, சீன நாட்டில் தோன்றிய மகாயான புத்தமதத்தின் பிரிவான
‘சென்’ பிரிவின் அடிப்படையில் அக்குறியீட்டிற்குப் பெயரிட்டுள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment