தன்
குடிமக்களை போதையில் ஆழ்த்தி, போதையின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயித்து,
அதில் வரும் வருமானத்தில் ஆட்சியை நடத்தும் அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களாக
மீண்டும் மீண்டும் பெறும் கேவலமான நிலையில் தமிழகம் இருக்கிறது. கொஞ்சம்
கொஞ்சமாக மக்களின் சிந்திக்கும் திறனை போலிப் பிரச்சாரங்கள் மூலமும்,
மொண்ணைத்தனமான கல்வியின் மூலமும் திட்டமிட்டு அழித்து விட்டார்கள்.
தொடர்ந்து தங்களையே ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கச் செய்வதற்கு அந்த
மக்களாகிய நம் அனைவருக்கும் தேர்தல் நேரத்தில் செய்யப்படும் சிறு
வெறுப்புப் பிரச்சாரமும் சில இலவசங்களும் மட்டும் போதுமென்றாக்கி
விட்டார்கள். நாமும் சுபம் என்று அமைந்து விட்டோம். தன் வாலை உணவென உண்ண
முயலும் பாம்பு போல, மக்களாட்சி சமூகத்தில் அரசியல்வாதிகள் குடிமக்களை
விழுங்கி தொடர்ந்து இந்த சமூகத்தை அதன் கீழ்மையை நோக்கி இழுத்துச் சென்று
கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் எஞ்சியிருக்கும் குறைந்தபட்ச
சிந்தனையோட்டத்தை வளர்த்தெடுத்து, மது தமிழகத்தை முழுவதும் அழிக்கும்முன்
பாதுகாத்தாக வேண்டும். இல்லையெனில், சமூகத்தின் முழு அழிவின் சாம்பலில்,
இருந்து புதிய சமூகம் எழுந்து வர காத்திருக்க வேண்டும்.
இன்று தமிழகத்தை பீடித்திருக்கும் கொலை
நோய் போதை. தமிழக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40% பேர் தினசரி மது
அருந்துவதாகவும் இந்த எண்ணிக்கை வருடத்திற்கு 8% கூடிக்கொண்டிருப்பதாகவும்
கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சென்றால், தமிழ்நாட்டில்
இன்னும் ஒரு பத்து வருடங்களில், மது ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர அனைவரும்
இந்த அவலப் பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பார்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment