Thursday, 13 August 2015

தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர்

subramanya sastri2
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya Sastri) அவர்கள் பின்னங்குடி சாமிநாத சாஸ்திரி, மங்களாம்பாள் இணையரின் மூத்த மகனாக, திருச்சி மாவட்டம் பாலக்கிருஷ்ணம் பட்டியில் ஜூலை 29, 1890 ஆண்டு பிறந்தவர். இந்த ஆண்டு இவரது 125 ஆம் ஆண்டு நிறைவு ஆண்டாகும்[1]. பன்மொழி அறிஞரான பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் தமிழிற்கும் வடமொழிக்கும் ஆற்றிய இலக்கியப்பணிகள் குறிப்பிடத்தக்கது.
தமிழிலக்கணப் பணியும் மொழிநூற் பணியும் செய்த பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார், தொல்காப்பியத்தை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தொல்காப்பிய மொழி பெயர்ப்பு பணியை 1919ல் தொடங்கி 1956ல் நிறைவு செய்துள்ளார் [2]. தொல்காப்பிய எழுத்ததிகார மொழிபெயர்ப்பை 1930 லும், சொல்லதிகார மொழிபெயர்ப்பை 1937 லும், பொருளதிகார மொழிபெயர்ப்பை 1945 லும் வெளியிட்டார். தொல்காப்பியக் குறிப்பு என்று பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் எழுதிய நூல்கள் மிகச் சிறந்தனவாகப் போற்றப்படுகின்றன.

தமிழ் அகராதியியலில் ஒரு திருப்புமுனையாக இருந்த “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி” உருவானதிலும் (1912ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு வரை) இவருக்குப் பெரும் பங்கு உண்டு, அகராதியின் துணை ஆசிரியர்களுள் ஒருவராகப் பணியாற்றினார். வடமொழி நூலான பதஞ்சலியின் “மகாபாஷ்யா”வும் இவரால் ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. மேலும் இவர் வடமொழியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஆனந்தவர்த்தனர் என்பவரின் “தொன்யாலோகம்” என்னும் வடமொழி அணி இலக்கண நூலை “தொனிவிளக்கு” எனத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment