நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆழ்வார்களின்
வைணவப்பாடல்களை மட்டும் கொண்டதல்ல. அதனுள் இராமானுஜர் பற்றிய பனுவலும்
இடம்பெற்றுள்ளது. இராமானுச நூற்றந்தாதி என்னும் அப்பனுவலை எழுதியவர்
திருவரங்கத்து அமுதனார் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் தெரியாத நிலையில்
அமுதனார் என்பதே இவர் பெயராக அமைந்தது. திருவரங்கத்துக் கோயில் நிர்வாகப்
பொறுப்பில் இவர் இருந்தவர் என்பதால் திருவரங்கத்துடன் இவர் பெயர் இணைந்து
திருவரங்க அமுதனார் ஆனார்.
இவர் இராமானுச நூற்றந்தாதி என்ற பெயரில்
நூறு பாடல்களை அந்தாதி முறையில் எழுதியுள்ளார். இவரின் ஆயிரக்கணக்கான
பாடல்களில் இந்நூறை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விலக்கி விடுகிறார்
இராமானுஜர். இத்தொகுப்பு நாலாயிரத்தில் இணைந்து நாலாயிரம் என்ற தொகையைத்
தந்து, நாலாயிர திவ்ய பிரபந்தத் தொகுப்பிற்கு முழுமை தருகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment