முன்னுரை:
தமிழில் நூல்கள் பல படிக்க விரும்புவோரின் ஆர்வத்தை நிறைவு செய்யும் நோக்கிலும், நூல்களை வரலாற்றுப் பதிவுகளாக ஆவணப்படுத்தும் நோக்கிலும் இணையவழி முயற்சியாக மின்னூல்களை (eBooks) உருவாக்கும் செயல்பாடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றது. உலகில் எந்த மூலையில் இருந்தும் இணையம் வழியாகத் தமிழ்நூல்களை தங்கள் கணினி வழி படிக்கும் வாய்ப்பு பல தொழில் நுட்பங்களைக் கடந்து இக்காலத்தில் நன்கு மெருகேறிய நிலையில் உள்ளது எனலாம். நூல்களை html இணையப் பங்கங்களாக பலவகை ‘எழுத்துரு’க்களில் (fonts) உருவாக்கி அளித்த நிலையில் இருந்து முன்னேறி, ‘ஒருங்குறி’ (Unicode) எழுத்துருக்களைப் பயன்படுத்தும் முறைக்கு முன்னேறியது படிப்பவருக்கு உதவும் நல்லதோர் மாற்றம்.
மின்னூல்களின் வளர்ச்சி:
இப்பொழுது கணினி வழி படிப்பதையும் கடந்து கைபேசி, ஆமசான் ‘கிண்டில்’ அல்லது பிற ‘ஆன்ட்ராய்டு’ மின்பலகை (டேப்லட்) போன்றவை வழியாகவும் மின்னூல்களை பதிவிறக்கிப் படிக்கும் நிலை மிகப்பரவலாக வழக்கத்திற்கு வந்துவிட்டது. இது போன்ற புதுமுறை படிக்கும் கருவிகளுக்கான மென்பொருள்களும், அதற்கேற்ற வகையில் மின்னூல் வெளியீடுகளும் வந்துள்ளன. கிண்டில் வழி படிப்போர் ‘மோபி’ (mobi) மின்னூல் வடிவிலும், பிறர் ‘இபப்’ (EPub) வகையிலான மின்னூல்களைப் படிக்கும் முறையும் உள்ளது. கணினி, கைபேசி, மின்பலகை போன்ற எந்தப் படிக்கும் கருவி கொண்டும் ‘உருப்பட வடிவம்’ (PDF) வகை மின்னூல்கள் படிக்கும் முறை உள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment