குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே
இந்தப்பாடல்குறுந்தொகை 60, குறிஞ்சித்
திணையில் வருகின்றது. தலைவனது பிரிவை தங்கிக்கொள்ள முடியாத தலைவி, தன்
தோழியிடம், தலைவன் தன்னிடம் அன்பும், அருளும்இல்லாதவராக இருந்தாலும் அவரைப்
பல முறை பார்த்தாலே சிறப்பு, இன்பம் எனக்கூறுகின்றாள். இப்பாடலை
இயற்றியவர் பரணர்.
குறுந்தாட் – குறுகிய அடியையுடைய
கூதளி – கூதளஞ்செடி
யாடிய- அசைதல்
நெடுவரை- பெரிய மலை
உட்கைச் – உள்ளங்கை
சிறுகுடை கோலிக் – பாத்திரம் போன்று குவித்து
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment