தமிழ் இலக்கியப் பரப்பில் கதை, கவிதை
போன்ற வகைகளில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லுகிற அளவிற்கு
உள்ளது. ஆனால் கட்டுரைகளைப் பொறுத்தவரையில் அவ்வெண்ணிக்கை குறைவாகவே
உள்ளது. பெண் கட்டுரையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். உரைநடை தமிழில்
முகிழ்த்த காலம் தொட்டே இவ்வெண்ணிக்கை குறைவு இருந்துள்ளது. இதற்குப் பல
காரணங்கள் இருக்கலாம். கட்டுரைகளை எழுதுவதற்கு என்று ஒரு தகுதி
இருக்கவேண்டும் என்ற எண்ணம், கட்டுரைகளை விரும்பிப்படிக்கும் வாசகர்கள்
குறைவு, கட்டுரையின் கருப்பொருள் தேர்வில் ஏற்படும் சிக்கல்கள் என்று பல
தடைகள் காரணமாக இவ்வெண்ணிக்கைக் குறைவு நிகழ்ந்திருக்கலாம், தொடர்ந்து
வரலாம்.
தமிழில் மூத்த பெண் கட்டுரையாளர் என்று
நீலாம்பிகை என்ற அம்மையாரைக் குறிப்பிடலாம். இவர் மறைமலை அடிகளாரின்
மகளாகவும், மாணவியாகவும் விளங்கியவர். இவர் ‘‘முப்பெண்மணிகளின்
வரலாறு(1928), பட்டினத்தார் போற்றிய மூவர்(1934), தனித்தமிழ்க் கட்டுரைகள்,
வடசொல் தமிழ் அகரவரிசை(சிற்றகராதி), ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும்
அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் (1952)” ஆகிய நூல்களைப் படைத்தவராக
அறியப் பெறுகிறார். அகராதித் துறையில் நுழைந்த பெண் இவர் என்றும் பெருமை
கொள்ள முடிகின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment