கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது. பல
மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கடந்து நம் அறிவை
வளர்த்துக்கொள்ளும் சாதனமாக இருப்பது கல்விமுறைதான். அதுவும் இந்தியா போன்ற
பன்முகத்தன்மையுள்ள, மதசார்பற்ற ஒரு துணைக்கண்டத்தில், ஒரு குறிப்பிட்ட
மதத்தினரை போற்றுவதும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தூற்றுவதுமாக
இருப்பதென்றால், அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா.? தற்போதுள்ள மதவாத பாசக அரசு
மென்மேலும் மதவாதத்தை தூண்டும் விதமாகவே செயல்பட்டு வருவது மிகவும்
வருத்தத்துக்குரியது… கடும் கண்டனத்துக்குரியது.!
இரு தினங்களுக்கு முன்பு சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதி திரு. எம்.எஸ். முரளிதரன் கூறியிருப்பது மக்களிடையே
பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். ‘வந்தே மாதரம்’ பாடலைக்
கட்டாயம் பாட வேண்டும் என்பது தான் அது. கல்வி நிலையங்களில் வாரம்
ஒருமுறையும், அரசு அலுவகங்களில் மாதம் ஒரு முறையும் பாடப்பட வேண்டும் என்ற
ஒரு கூற்று… இது நம் அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும்
மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். இந்தப் பாடல் எதற்காக எழுதப்பட்டது, எதை
முன்னிருத்தி பாடப்பட்டது என்ற விவரங்கள் அவருக்குத் தெரிந்து தான், இப்படி
சொல்லி இருப்பாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்தத் திணிப்பு எதற்கு
என்பது மிக முக்கிய கேள்வியாக இருக்கிறது. இப்பாடலைப்பற்றி சிறிது
பார்ப்போம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment