கடந்த மாதம், உத்திரபிரதேச
மாநிலத்திலிருந்து ராமராஜ்ஜிய ரதம் என்ற ஒன்று கிளம்பி, கர்நாடகா வழியாக
தென்னிந்தியாவிற்குள் நுழைந்து, கேரளா வழியாக, இரு தினங்களுக்கு முன்,
தமிழ்நாட்டிற்குள் வந்ததும், அதனைத் தொடர்ந்து நம் மாநிலத்தில் நடந்த
போராட்டங்களும், கைதுகளும், சிலை உடைப்பு சம்பவங்கள் போன்றவைகளும்
நடந்தேறியிருக்கின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இந்த
ரதயாத்திரையின் நோக்கம் ராமராஜ்ஜியம் அமைப்பது, ராமர் கோவில் கட்டுவோம்
என்பதாகும். அயோத்தியில், 400 ஆண்டுகள் பழைமையான பாபர் மசூதி
இடிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து நடந்த மதக்கலவரங்களும், முன்னாள்
மத்திய அமைச்சர் அத்வானி அவர்களின் ராமராஜ்ஜிய ரதயாத்திரை ஏற்படுத்திய
விளைவுகளும் நாடறிந்த செய்தியாகும். உண்மை இப்படியிருக்கையில், இப்போது,
மறுபடியும், விஸ்வ இந்து பரிஷத் என்ற இந்துத்துவ அமைப்பு, இந்த ரதயாத்திரை
என்ற ஒரு விசயத்தை கையில் எடுத்துக்கொண்டு ஐந்து மாநிலங்கள் வழியாக உலா
வருகிறோம் என்ற பெயரில் நாட்டில் மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சி
செய்கிறது.
இந்த ரதயாத்திரை என்பது தேவையில்லாத ஒன்று. இன்னமும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் முடிவடையாத நிலையில், ராமர் கோவில் கட்டுவோம் என்பது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. பல இனங்கள், கலாச்சாரங்கள், பல மொழிகள் பேசும் மக்கள் என பன்முகத்தன்மையுள்ள நாடு. அப்படியிருக்கையில், ஒரு மதத்தை சார்ந்து ஆட்சி அமைப்போம் என்று சொல்வது நேர்மையாகுமா.? வடஇந்தியாவில், மதத்தை வைத்து அரசியல் செய்து, வெற்றி பெற்ற பா.ச.க அரசு, இங்கும் அதே யுக்தியை கையாளப்பார்க்கிறது என்பது தானே உண்மை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/
No comments:
Post a Comment